பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

x : ஆர்மேனியன் கல்லூரி மற்ருெரு முக்கிய விசேஷத் தன்மை பெற்றதாகும். இக் கல்லூரியின் அறைகளுள் ஒன்றில்தான் 1811 ஜூலையில் வில்லியம் மாக்பீஸ் தாக்கரே பிறந்தார். சென்னையில் இருக்கும் ஆர்மேனியன் தெரு இன்றும் நகரத்தின் பரபுரப்பான வீதிகளில் ஒன்ருக விளங்குகிறது. தீவிரத் தொழில் இயக்கங்களின் மையமாகவும் அது அமைந் துள்ளது. ஆர்மேனிய இனத்தவரின மிச்சசொச்சங்களாக, ஒரே ஒரு தம்பதியர் மட்டும் இத் தெருவின் ஆரம்பத்தில் உள்ள வித்தையான புராதனக் கட்டடம் ஒன்றில் வசிக்கிரு.ர்கள். அது தான் சென்னையின் செயின்ட் மேரீஸ் ஆர்மேனியன் சர்ச் ஆகும். இருவழிப் படிக்கட்டு ஒன்று ஆலயத்தின் வாயிலுக்கு இட்டுச் செல்கிறது. வாயிலின் முகப்பில் 1772 என்று வருஷம் குறிக்கப் பட்டிருக்கிறது. கட்டடத்தின் தோற்றமும் அதை நிரூபிக்கிறது. பூர்விக ஆர்மீனியன் தேவாலயம் 1712-ல் செயின்ட் ஜார்ஜ் கோட்டை அருகில் கட்டப்பட்டிருந்தது. ஆங்கிலேயருக்கும் பிரெஞ்சுக்காரர்களுக்குமிடையே நிகழ்ந்த து ப் பாக் கி ச் சண்டையில் அது தாக்குண்டு அழிந்தது. எனவே அதைக் கைவிட நேரிட்டது. அதுவரை இடுகாடு ஆக இருந்த இடம் புதிய ஆர்மேனியன் சர்ச் ஆக மாற்றப்பட்டது. இந்த ஆலயத்தில் மின்விளக்குகள், ஒரு டெலிபோன், மற்றும் தற்காலத்துக்கு உரிய சின்னங்கள் எல்லாம் இருக்கின்றன. ஆனலும்கூட, கட்டடத்தினுள் புகுந்ததும் நாம் இருநூறு வருஷங்களுக்கு முற்பட்ட காலத்துக்கு இட்டுச் செல்லப் படுகிருேம். செங்கற்களாலும் சுண்ணும்பாலும் ஆன கட்டடம் அது. அதன் சுவர்கள் ஒன்றரை அடி கனம் உள்ளவை. ஒவ்வொரு கதவுக் கீலும் (இணைப்பும்) நான்கு அல்லது ஐந்து ராத்தல் கனம் இருக்கும் என்று தோன்றுகிறது. தரையின் பெரும்பகுதியில் கருங்கல் பலகைகள் காணப்படுகின்றன. ஒவ்வொரு கல்லும் ஒரு கட்டில் அளவு பெரியதாக இருக்கிறது. ஒரு விதத்தில் அவை கட்டில்கள்தான். ஏனெனில், இந்த இரண்டரை நூற்ருண்டுக் காலத்தில் சென்னையில் மரணம் அடைய நேர்ந்த ஆர்மேனியர்கள் அக் கற்களின் அடியில்தான் மீளாத்துயிலில் ஆழ்ந்திருக்கிருர்கள். இச் சமாதிக் கற்கள் அவர்களது வரலாற்றை வி சித் தி ர மா ன எழுத்துகளில் புலப்படுத்துகின்றன. ஆர்மேனிய மொழியை அறிந்திராதவர் களுக்குத்தான் அவை விசித்திரமானவை, அக் கற்கள் வெகு கெட்டியாய், கனமாய், அழிக்க முடியாதனவாய்த் தோன்று கின்றன.