பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எம்.கிர்திச் சார்கிஸ்யன் 107 இளையவர்கள் சிரித்தார்கள். கிழவர் வானே சுதந்திரக் காதலில் நம்பிக்கை உடையவர் என்பதை இவ்விதம் அவர்கள் கண்டுகொண்டார்கள். ஏரெவிக் அவனைத் தேடி வராதபோதிலும், கேரன் இன்னும் "மெரின’’ கீதத்தைச் சீட்டியடித்துக்கொண்டிருந்தான். அவள் வராமல் இருந்ததால் இப்போது எவரும் கவலைப்படவில்லை. அவள் கேரனுக்குத் துரோகம் இழைத்துவிட்டாள்; அப்படி யிருக்கையில் அவளைப்பற்றி ஏன் கவலைப்படவேண்டும்? ஆயினும், ஒரு சோக மேகம் எங்கள் முற்றத்தில் கவிந்துதான் இருந்தது. கேரோ பாட்டுப் பாடுவதை நிறுத்திவிட்டான். அவன் தனது பால்கனி பக்கம் வந்தால், எராநூய் அத்தை தனது வெறுப்பான பார்வையை அவன்மீது பாய்ச்சிவிட்டுச் சொல்லுவாள்: 'இன்னொருவனின் காதலியை இவன் திருடிக் கொள்வான் என்று எனக்கு எப்பவும் தெரியும். ஒரு கொள்ளேக் காரனின் மூஞ்சி இவனுக்கு இருக்கிறது.” 'அவன் நேர்த்தியானவன். பெண்கள் அவனை விரும்பு கிரு.ர்கள். நான் அவனைப் பார்த்துப் பொருமைப்படுகிறேன்’ என்று கிழட்டு வானே பதிலுக்குச் சொன்னர். 'அவனிடம் அப்படி நேர்த்தியானது என்ன இருக்கிறது? அவன் தன் நண்பனுக்குத் துரோகம் செய்துவிட்டான்.” 'ஆலுைம்கூட’’ என்று கிழட்டு வானே அர்த்தபுஷ்டியோடு கூறினர்.

கேரன்!” ஏரெவிக்தான் கூப்பிட்டாள். நாங்க ள் எல்லோரும் அவரவர் பால்கனிக்கு ஓடினோம். மறுபடியும் எங்கள் கண்கள் மகிழ்ச்சியினல் ஒளிர்ந்தன. பிறகு, கேரன் மெரிஞ'வைச் சீட்டி அடித்தவாறு கீழே ஒடினன். ஏரெவிக்கின் கரத்தோடு கரம் கோத்து, காதல் பாதையில் வெகு வேகமாக ஓடினன். தனது மதிப்பு மிக்க வானத் துணுக்கையும் தன்னோடு இழுத்துக் கொண்டு போனன். -

'இது எனக்குப் புரியவில்லை’ என்ருர் கிழவர் வானே. 'ஏன் புரியவில்லை? அவள் கேரோவைப் புறக்கணித்து விட்டாள்!’ என்று எரா நூய் அத்தை அவரிடம் உரக்கச் சொன்னுள். வானே உடனே தன் கருத்தை மாற்றிக்கொண்டார். "ஆமாம். அவள் நல்ல பெண். அவள் பெற்ருேர்கள் வாழ்க!” என்ருர்.