பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வி. பெத்ரோசியன் 133 எனக்கென்று ஒரு பெயரைத் தோண்டி எடுத்திருக்கிருப். ’’ அப்பா அவனே அறைந்தார். ஆளுல் மறுநாள் அவர் அவனுக்கு ஒரு ஜப்பான் டேப் ரிக்கார்டர் வாங்கித் தந்தார். செயல் படுத்தப்பட்ட அற்பத்தனம் என்றே அதை அவன் கருதினுன், அவனது ஞாபகங்கள் சில அடையாளங்களால் விழிப்புற்றன. யுத்த காலத்தின்போது அவன் க்யூவில் நின்ருன், ரொட்டியை இறக்கி வைத்துக்கொண்டிருந்தார்கள். திடீரென ஒரு பையன், பதினன்கு பதினேந்து வயதிருக்கும், ஒரு முழு ரொட்டியைத் தூக்கிக்கொண்டு ஓடினன். கடைக்காரன், ஒரு போர் வீரன், மற்றும் க்யூவில் நின்ற பலரும் அவனே துரத்தியபடி ஒடிஞர்கள். இவனும் துரத்தினன். முடிவில், அவர்கள் அந்தப் பையனப் பிடித்தார்கள். ஆனல் ரொட்டி அவன் கையில் இல்லை. தப்பி ஒடிய சில நிமிஷங்களில் அந்தப் பையன் முழு ரொட்டியையும் தின்துவிட்டான். தி டு க் கி ட் டு ம் வியப்படைந்தும், கிடைக் காரனும் போர் வீரனும் மற்றவர்களும் பையனையே பார்த் தார்கள். அவன் தலை குனிந்து செயலற்று நின்ருன். ஆனல் அவன் கண்களில் தீ கனன்றது. அவன் தின்றுவிட்டான். தின்று தீர்த்தான். ரொட்டியை, சூடாக ஒரு கிலோ கிராம் எடை இருந்த முழு ரொட்டியையும் தின்ருன். இந்த நிகழ்ச்சியை இவன் வீட்டில் சொன்னபோது, அம்மா அழுதாள். ' ஏழைக் குழந்தை! அவனே நீ வீட்டுக்கு இட்டு வந்திருக்கவேண்டும். சூடான ஆகாரம் கொஞ்சம் நம்மிடம் இருக்கிறது. அவனை இங்கே வீட்டுக்கு நீ கூட்டி வந்திருக்கவேண்டும்’ என்ருள். ...அப்புறம் அவன் தந்தை அமைதியாக அவன் அருகில் அமர்ந்தார். பிறகு அவன் அக்கா, அத்தான் ஹாருதுரன், அக்கா மகள் உட்கார்ந்தார்கள். அடுத்து அவன் அண்ணன். பின்னர், எங்கிருந்தோ வந்து ரொட்டி திருடிய பையன். அவன் தெளி வாக, மிகத் தெளிவாக அவர்கள் எல்லோரையும் பார்த்தான். அந்தப் பையன் வெறும் காலுடனும் வருத்தமாகவும் இருந் தான். அவன் தன் அம்மாவைச் சந்தோஷப் புன்னகையுடன் கண்டான். கடந்துபோன நாற்பது வருஷங்களின் தொலைவில், நாகரிகம் இல்லாத ஒரு நகரத்தின் ஒரு போட்டோகிராபரது ஸ்டுடியோவின் அறைகளுக்குள் தங்கிவிட்ட சிரிப்பு அது. அப்புறம் பாரிஸ் நகர மிஸ் மேரி ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டான். எனினும், அவர்கள் அனைவருக்கும் பதிலாக, ரேடியோ அயல்நாட்டுச் செய்திகளை ஒலிபரப்பிக்கொண் டிருந்தது. அந்தக் கனவுத் தோற்றம் எவ்வளவு நேரம் நீடித்தது? ஆயினும், அவன் அம்மா அக் கனவுக் காட்சிகளின் நடுவே நாள் தோறும் வாழ்ந்தாள்.