பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 36 அழைப்பு ஜாடிகளிலிருந்து ஒயின் எடுத்து ருசி பார்த்தான். ஆனல் எதுவும் அவன் தேடிய தரத்தில் அமையவில்லை. அதற்குள் சாயங்காலம் வந்துவிட்டது. வருத்தம் அடைந்த மகன், வண்டியை, இருபுறமும் மரங்கள் வரிசையாய் அடர்ந்து நின்ற சாலை வழியாக ஒட்டிச்சென்ருன். திடீரென்று மரங்களி னுரடே ஒரு வழி தென்பட்டது. ஸோரோ, காரணம் எதுவு மின்றி, பரபரப்பு அடைந்தான். 'நாம் அதைக் கடந்து விட்டோம்” என்று கூறி, காரின் ஸ்டீயரிங் சக்கரத்தைப் பற்றினன். கார் சாலையைவிட்டு விலகி ஓடி, புதர்களுக்குள் புகுந்தது. அது பெரிய விபத்து ஒன்றுமில்லை. கதவில் சிறு கீறலும், அங்கும் இங்குமாக லேசாகச் சில கோடுகளும் ஏற்பட்டிருந்தன. மகன் கோபம் அடைந்தான். "ஆத்திரப்படாதே, மகனே. விஷயங்கள் நிகழ்ந்து விடுகின்றன. உலகத்தில் எதுவும் நஷ்டமாவதில்லை' என்று ளோரோ மகனே அமைதிப்படுத்தினன். 'இந்தக் கிராமம் எனக்குப் பிடித்திருக்கிறது. சீக்கிரமே அவன் ஊரின் நடுவில் காரை நிறுத்தச் செய்தான். 'எப்படி இருந்தாலும் நாம் இங்கேயே வாங்கிவிடுவோம்’ என்ருன். அங்கே கூடியிருந்த மக்களை நோக்கி நடந்தான். எல்லோரிடமும் ஒயின் இருந்தது. அனைவரும் அவரவர் நிலவறைக்கு அழைத்துச் செல்ல முன்வந்தார்கள். ஆனல் ஒரே ஒருவன், மெலிந்த ஆசாமி, மட்டும் மவுனமாக இருந்தான். லோரோ அவனிடம் பேசினன். "நிச்சயமாக என்னிடம் இருக்கிறது. திராட்சைத் தோட்டமும் இருக்கிறது, திராட்சை மதுவும் இருக்கிறது’ என்று அந்த ஆள் பதிலளித்தான். 'கடவுள் ஆணை. உன் ஒயினைக் கொண்டே நான் என் மகன் கல்யாணத்தை நடத்துவேன். வா, உன் வீட்டுக்குப் போகலாம்’ என்று ஸோரோ அறிவித்தான். முகப்புக்கு மேலே மரச் சட்டங்களின்மீது திராட்சைக் கொடிகள் படர்ந்து காட்சி தந்த அந்த வீடு மது வாசனையால் நிறைந்திருந்தது. வீட்டுக்கு அருகாமையில் நின்ற ஏப்ரிகாட் மரத்தின் அடிப்பகுதியில் உலர்ந்த மிளகு சிவப்புச் சரங்களாகத் தொங்கி ஊசலிட்டன. மிகச் சிறிய, சுறுசுறுப்பான, கிழவி ஒருத்தி அச் சரங்களைக் கீழே இறக்கிக்கொண்டிருந்தாள். ஸோரோவுக்கு அந்த விடும் திராட்சைத் தோட்டமும் வெகுவாகப் பிடித்திருந்தன. "இங்கே நீ ஒரு நல்ல இடம்