பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Í 40 அழைப்பு முதியவள் ரொட்டியும் இதர தின்பண்டங்களும் எடுத்து வந்து, உண்ணும்படி அவர்களை உபசரித்தாள். ஆனால் ஸோரோ உணவைத் தொடவில்லை. அவன் ஜாடிக்கு அருகே சுவரில் சாய்ந்துகொண்டான். பாத்திரத்தை நிரப்பிக் குடித்தான். நிரப்பினன். பாத்திரத்தை அ டி வ ைர காலி செய்தான். மீசையைத் துடைத்தான். பெருமூச்செறிந்து, முஷ்டியில் 'அலெஹ்..” என்று முனகினன். கிழவி மேஜை முன் எங்கோ பார்த்தவளாய் உட்கார்ந்திருந் தாள். சிறிது நேரத்துக்கு முன்பு, ஸோரோ முற்றத்திற்கு வந்த சமயம், அவள் உணர்வோடும் செயல் வேகத்துடனும் இருந் தாள். இப்போதோ குழம்பிக் குறுகி உட்கார்ந்திருந்தாள். ஒரு முதியவளின் கைப்பிடி அளவாய், அசதியோடு, கண்களில் நீர் பொங்க அவள் இருந்தாள். 'உன் புருஷனை நான் பார்த்துவிட்டேன், அலெஹ். உனக்கு வேறு யார் இருக்கிருர்கள்?’’ 'கடவுளுக்குக் கீர்த்தி சேரட்டும். எனக்கு மகன்கள் இருக் கிருர்கள், சகோதரன் ஸோரோ. அவள் தன் கண்ணிரை அடக்கத் தீர்மானித்தாள். எனக்கு மருமகள்கள், கல்யாண மான பெண்கள், பேரக் குழந்தைகள் எல்லோரும் இருக்கிருர்கள். உனக்கு யார் இருக்கிரு.ர்கள், சகோதரன் ஸோரோ?’’ 'கடவுள் கீர்த்தி பெருகட்டும். எனக்கு மகன்கள் இருக்கிருர்கள், அலெஹ். மருமகள்கள், மணமான மகள்கள், அலெஹ், ஏகப்பட்ட பேரக் குழந்தைகள், மற்றும் இந்த ஒயின்.” ஸோரோ திரும்பவும் பித்தளைப் பாத்திரத்தை நிரப்பினன். "இந்த ருசிமிகுந்த ஒயின் எனது இளைய மகனின் சந்தோஷ வைபவத்துக்காக; அவன் கல்யாணத்துக்காக. அலெஹ்.. ஒ, அலெஹ், என் கண்ணே!’’ அவன் பாடத் தொடங்கினன். மது ஜாடிமீது குனிந்திருந்த வீட்டுக்காரன் லோரோவைப் பார்த்தான். பெரிதாகச் சிரித்தான். தனது ஒயின் ரசித்துப் பாராட்டப்படுவதைக் கண்டு அவன் பெருமை கொண்டான். "எவ்வளவு ருசியான ஒயின் இது, அலெஹ்!’ என்று லோரோ, பாட்டை நிறுத்திவிட்டுச் சொன்னன் : இவ்வளவு ருசியான ஒயினை இவ்வளவு காலமும் நீ இங்கே வைத்திருக்கிருய். நான் அதுபற்றித் தெரியாமலே இருந்தேனே. ஓ, அலெஹ்!” பிறகு தொடர்ந்து பாடினன். வீட்டுக்காரனும் ஸோசோவின் மகனும் ஒயினை அளந்து, விலை கணக்கிட்டு முடித்தார்கள். ஸோரோ பாடிக்கொண்டிருந்