பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஹ்ரான்ட் மாடவோசியன் 16. I தோய்ந்த குரல் உடனடியாக, மொச்சைச் செடி வரிசைகள் பழஞ்சாணிக் குவியல்களுக்கெல்லாம் மேலாம் எ ழு ந் து தொங்கியது. அவள் கத்தினுள்: "அது ஒரு பரு-ந்-து.” தெளிவான ஆகாயம் அக் கிழவியின் கண்களில் இருண்டு, பருந்துகளும் ராஜாளிகளும் நிறைந்து காணப்பட்டது. வான மண்டலம் அவள் பார்வைக்குத் தெளிவாகப் புலஞன காலத்தில், அவளது வாழ்க்கையில் அவள் கண்ட ஒவ்வொரு பருந்தும், அவை எல்லாமே இப்போது ஒரே சமயத்தில் அங்கே இருந்ததாக அவளுக்குத் தோன்றியது. "ஹே-ஏ-ஏய்! அதோ ஒரு பரு-ந்து!’ எந்த வேளையிலும் மழை பெய்யத் தொடங்கலாம் என்ருெரு உணர்வு அவளுக்கு இருந்தது. அதனல், புல்வெளியில் கிடந்த வைக்கோல் கெட்டுப்போகும்; வாத்துகள் மொச்சைப் பயறு களைக் கொத்திவிடும்; கிழட்டு நாய் வழி தவறி வயல்களுக்குள் சென்று செத்துப்போகும்; பருந்து ஒரு பெட்டைக்கோழியைத் துக்கிப் போய்விடும்; அவளுடைய மருமகள் மார் மகன்களோடு சண்டை பிடிப்பார்கள்; என்றெல்லாம் அவளுக்கு உணர்வு ஏற்படும். அவ்வப்போது அவள் வாத்துகளிடம் கூறுவாள் : 'நீங்கள் எல்லாம் செத்து விழவேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன்.’’ வைக்கோல் உள்ளே வந்து சேர வேண்டும். ஏ. பெண்களா, வைக்கோலை உள்ளே கொண்டுவந்து விட்டீர்களா? நீங்கள் என் அப்பாவிப் பையன்களை என்ன பாடு படுத்தியிருக்கிறீர்கள்; தொணதொணத்து அவர்களைச் சாகடிக் கிறீர்களே, பாருங்கள்! பசார்!’ என்று கத்துவாள். பழம் வெயிலில் உலர்ந்துகொண்டிருந்தது. கிழவி என்ன சொல்வாள் என்று பார்ப்பதற்காகக் கிழட்டு நாய் காத்திருந்தது. தேன் கூடுகளில் ஈக்கள் இரைந்தன. சிறிய நீலக் கூண்டுகளுக்கு மேலே சூடான கனத்த ரீங்காரம் கவிந்திருந்தது. அவள் மூத்த மகன் வீட்டின் முன்னே கோடரி கீறிய சத்தம் இப்போது நின்று விட்டது. எங்கோ வெகு அருகில் ஒரு பெண் உரக்கச் சிரித்தாள். 'உன்னைப்பற்றி நீயே வெட்கப்பட வேண்டும் பெண்ணே!’ என்று கிழவி சொன்னுள். 'நீ மலையிலிருந்து எப்போது கீழே வந்தாய்?’’ பதில் இல்லை. யாரோ தூரத்தில் மறுபடியும் சிரித்தார்கள். அது ஒரு சிறு பெண் சிரித்தது அல்ல; ஒரு ஸ்திரீயின் சிரிப்பு. ஆ-11