பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

星92 ஒவ்வொரு பத்திலும் ஒருவர் ஆளுல், இதர வீரர்கள் காத்திருந்தார்கள். ஏனென்ருல் அவர்களுடைய எண்களை அவர்கள் அறியவில்லை. அவர்கள் உரத்து எண்ண ஆரம்பித்தனர். அவர்கள் மிக மெதுவாகப் பேசினர்கள். முதலாவது வீரன்கூடத் தனது சொந்தக் குரலைக் கேட்டபோது பயந்துவிட்டான். 'ஒன்றுக’’ ஒன்பதாவது வீரன் வெளிறினன்; ஏனெனில் அவன் பத்தா வதுக்கு மிக அருகாக நின்றுகொண்டிருந்தான். ஒன்பது, பத்து என்ற எண்களுக்கிடையில் மிக அற்ப வித்தியாசமே இருந்தது. அந்தக் காரணத்தினலேயே எதுவோ பத்திலிருந்து ஒன்பதின் பங்கில் விழுந்தது. அவன் ஒன்பதிலிருந்து பத்து வரை எண்ணும்படி தன்னையே வற்புறுத்தினன். ஒன்று, இரண்டு, மூன்று நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து. நல்லது. எவ்வாருயினும், ஒரு எண் வித்தியாசம் சின்ன விஷயமல்ல. வித்தியாசம் எதுவும் இல்லை என்ருல் ஒன்பதாவது எண் இருக்கவே இருக்காது. அவன் தனது கண்டு பிடிப்பைக் கருதிப் புன்னகைத்தான். வீரர்களின் மெதுவான குரல்களை நன்கு கேட்க முடிந்தது. பதினறு...” பதினேழு .' * பதினெட்டு ...”* "பத்தொன்பது...” பத்தொன்பதாவது நபர் வெட்கமடைந்தான். ஏனெனில் அவன் இருபதாவது மீது இரக்கம் கொண்டான். அவன் அவர்கள் குடும்பத்துக்கு ஆறுதல் கூறிக் கடிதம் எழுதவேண்டி யிருக்கும். அப்புறம், யுத்தத்திற்குப் பின் அவன் போய் தன்னல் இயன்ற உதவி புரிவதற்காக அவர்களைப் பார்க்க வேண்டியது அவசியமாகும். எல்லாம் சந்தோஷம் காரண மாகத்தான்... தான் இருபதாவது இல்லே, தான் சாகவேண்டிய தில்லே என்பதால் அவன் சந்தோஷப்பட்டான். மனிதர்கள் எவ்வளவு அற்பர்களாக, எவ்வளவு கோழைகளாக இருந் தார்கள் என்று அவன் புரிந்துகொண்டான். தான் எப்போதும் ஒரு யோக்கியமான மனிதனக இருந்ததாக அவன் எண்ணினன். இப்போது வாழ்விலேயே முதல் தடவையாக அவன் தன்னையே கண்டுகொண்டான். ஆனல் அவன் ஏன் தன்னைப்பற்றித் தானே அவ்வளவு மோசமாக எண்ண அனுமதித்தான்? மறுபடியும் சந்தோஷத்தினுல்தான்க