பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசிரியர்கள்பற்றிய குறிப்புகள் 267 காரென் சிமோனியன் (1936– J சிமோனியன் ஏரெவானில் பிறந்தார். 1958-ல் பாலி டெக்னிக் இன்ஸ்டிடியூட்டில் இயந்திர நிர்மாணப் பகுதியில் கற்றுத் தேர்ந்தார். ஆனால் பின்னர் அவர் இலக்கியத்தில் ஈடுபட்டார். அவரது முக்கியப் படைப்புகள் : 'மனவிருப்பம்', 'போய் வா, நத்தானியேல்’, 'மருந்து விற்பன்னர் நெர்சன் பாட்சன்’’. 'உங்கள் கனவு நனவாகட்டும்’ என்ற அவரது நாடகம் ஏரெவான் தியேட்டரில் இளைஞர்களுக்காக அரங்கேற்றப் பட்டது. 'ஆர்மென் பிலிம் ஸ்டுடியோவில் தயாரான சில திரைப் படங்களுக்கும் அவர் கதை வசனம் எழுதியிருக்கிருர் . பெர்ச் செய்துன்சியன் (1938– } செய்துன்சியன் எகிப்தில், அலெக்ஸாண்டிரியா நகரில் பிறந்தார். 1948-ல் அவர் குடும்பம் சோவியத் ஆர்மேனியா வுக்குக் குடியேறியது. 1963-ல் பெர்ச் செய்துன்சியன் பியாதி-கேர்ஸ்க் நகரில் அயல்மொழிக் கழகத்தில் கற்றுத்தேர்ந்தார். பிறகு மாஸ்கோவில் திரைக்கதை வசனம் எழுதும் உயர் பயிற்சி பெற்ருர். முக்கியப் படைப்புகள் : 'அவன் நண்பன்', "எங்கள் அண்டைவீட்டாரின் குரல் கள்’’, 'பாரிசுக்காக (சிறுகதைத் தொகுப்புகள்). எங்களுக்கு பிறகு (ஒரு கதை). "க்ளாட் ராபர்ட் ஐசர்லி (நாவல்). செய்துன்சியன் எழுதிய 'அழிக்கப்பட்ட நகரத்தின் கதை', "மிகவும் துக்ககரமான மனிதன்” என்ற நாடகங்கள் ஏரெவான் நாடக அரங்குகளில் நடிக்கப்படுகின்றன. 'ஆர்மென் பிலிம் ஸ்டுடியோவில் தயாரான சில திரைப் படங்களுக்கு அவர் கதை வசனம் எழுதியிருக்கிரு.ர்.