பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஹோவன்னஸ் டூமேனியன் (1869–1923) என் நண்பன் நெலோ நாங்கள் ஊர்ப்பிள்ளைகள் எல்லோரும் எப்போதும் சந்தோஷ மாக இருந்தோம். எங்களுக்கென்று பள்ளிக்கூடம் எதுவும் கிடையாது: படிப் பதற்குப் பாடங்களும் இல்லை. நாங்கள் பறவைகள் மாதிரித் துள்ளித் திரிந்தோம். நாள் முழுவதும் விளையாடினுேம். ஆ. நாங்கள் எப்படி ஆடிக் களித்தோம்! எவ்வளவு நல்ல நண்பர்கள் நாங்கள்! நாங்கள் ஒருவரை ஒருவர் எப்படி நேசித்தோம்! எங்களுக்குப் பசி வந்தபோது நாங்கள் வீட்டுக்கு ஓடி ஒரு துண்டு ரொட்டியும், மண்பானையிலிருந்து கொஞ்சம் வெண்ணெயும் எடுத்துத் தின்போம். திரும்பவும் விளையாட ஓடுவோம். அவ்வப்போது மாலை நேரங்களில் நாங்கள் வம்பு பேசவும் கதைகள் சொல்லவும் கூடுவோம். பையன்களில் ஒருவன் பெயர் நெஸோ. அவனுக்கு ஏகப் பட்ட கதைகளும் மோகினிக் கதைகளும் தெரியும். அவற்றுக்கு ஒரு முடிவே கிடையாது. கோடையில் நிலா நிறைந்த இரவுகளில், எங்கள் முற்றத்தில் குவிந்து கிடந்த கட்டைகள் மீது வட்டமாக அமர்ந்து, நாங்கள் நெஸோவின் முகத்தையே கிறக்கத்தோடு கவனித்துக்கொண் டிருப்போம். அவன் கூரி-பாரிபற்றியும், சொர்க்கத்தின் இனிய பறவைபற்றியும், ஒளியும் இருளும் நிறைந்த அரசுகள்பற்றியும் கதைகள் பல சொல்வான். 'சொல்லு, நெஸோ. இன்னும் ஒரு கதை சொல்லு. குருட்டு ராஜாபற்றிய கதை, கிளிக் கதை, வழுக்கைத் தலையனையும் தாடியில்லாத ஆசாமியையும்பற்றிய கதை சொல்லு.’’ 2. ஒருநாள் எங்கள் ஊரில் ஒரு பள்ளிக்கூடம் திறந்தார்கள். என் பெற்ருேரும், சுமார் இருபது முப்பது பெற்ருேர்கள்