பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. என் நண்பன் நெலோ 4 அப்புறம் இரண்டு வருஷங்களுக்குப் பின்னர், என் தந்தை என்ன வேருெரு பெரிய நகரத்துக்கு அழைத்துப்போளுர், மேலும் பெரிதான இன்னெரு பள்ளியில் என்னைச் சேர்த்தார். நான் அங்கிருந்து ஊர் திரும்பியபோது, எனது முன்னுள் விளையாட்டுத் தோழர்கள் என்னைக் காண வந்தார்கள். இப்போது அவர்கள் பெரியவர்களாகி இருந்தார்கள். அவர்களும், இதர குடியானவர்களைப்போல் எனக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு, அவர்களைப் போலவே மரியாதைகாட்டி ஒரு புறமாக ஒதுங்கி நின்ருர்கள். எங்கள் சம்பாஷணையில் ஒரே ஒரு தடவை, ஊர்ப் பள்ளிக்கூடத்தில் நாங்கள் படித்த நாட்கள் எனக்கு நினைவிருக் கிறதா என்று யாரோ கேட்டபோதுதான், நெலோ பேசினன். இரவு நேரங்களில் உன் வீட்டு முற்றத்தில் மரக்கட்டை களைச் சுற்றி நாம் எல்லோரும் உட்கார்ந்து கதை பேசியது உனக்கு நினைவு இருக்கிறதா?’ என்று அவன் கேட்டான். 'அதை நான் எப்படி மறக்கமுடியும் என் நினைவில் நிற்கிற மிக அருமையான விஷயங்களில் அது ஒன்று ஆயிற்றே!’ இதைக் கேட்டதும் நெஸோவுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டதாக நான் நினைத்தேன். எனினும், அவன் ஒரு அந்நியனுக, தொலைவிலேயே நின்ருன். நான் மாநகருக்குத் திரும்பவேண்டிய காலம் வந்ததும், என் தந்தை எனக்காக நெஸோவின் அப்பாவிடமிருந்து ஒரு குதிரையை வாடகைக்கு அமர்த்தினர் . நான் சவாரி செய்யும் குதிரையிளுேடு நெஸோவும் செல்லவேண்டும் என்று ஏற்பாடு. நாங்கள் புறப்பட்டோம். நான் குதிரைமீது அமர்ந்தும், கிழிந்த துணிகளும் தேய்ந்து பழசாகிவிட்ட செருப்புகளும் அணிந்த நெஸோ நடந்தும் பயணம் செய்கையில் எனக்கு மன வருத்தம் உண்டாயிற்று. சிறிது தூரம்தான் போயிருப்போம். நான் நடக்க விரும்புவதாகச் சொல்லிக் கீழே இறங்கினேன். நாங்கள் இருவரும் சேர்ந்து நடந்தும், மாறி மாறி முறை வைத்துக் குதிரை சவாரி செய்தும் முன்னேறிளுேம். நெஸோ சந்தோஷப்பட்டான். ஆனால், எனது நேர்மை உணர்வையும் தோழமை உணர்ச்சியையும் அவன் புரிந்துகொள்ளவில்லை. மாருக, நான் நடந்து சென்றதற்காக என்னை மடையணுகவே அவன் கருதின்ை என்பதை நான் உணர்ந்துகொண்டேன். இதல்ை என் மனம் புண்பட்டது. ஆயினும், இதைவிட மோசமானது இனிமேல்தான் நடக்கவிருந்தது.