பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவெதிக் இலாகியன் * 1 கைநிறைய ரோஜா மலர்கள் ஏந்தி நளியத் அருகே வந்தாள். அவளே ஒரு ரோஜாப்பூ மாதிரி சுகந்தம் பரப்பினள். அவனே வாழ்த்தினுள். கவிஞன் துக்கத்தோடு இருந்தான். அவனது வெளிர் உதடு களில் விசனம் படிந்திருந்தது. 'மனிதரில் மிகவும் சந்தோஷமானவரே, உங்களை எது துயரப்படுத்துகிறது?’’ சாஅதி மவுனமாக இருந்தான். உங்கள் நினைவோட்டத்தை நான் நேசிக்கிறேன். ஒ, சாஅதி! உங்கள் துக்கம் அறிவுபூர்வமானது. வேதனையில்தான் முத்துகள் பிறக்கின்றன என்றும், வாசனை திரவியம் எரிகிற போதுதான் நறுமணம் தருகிறது என்றும் உங்கள் இனிய உதடுகள்தானே அறிவித்திருக்கின்றன.” சாஅதி ஒளியற்ற மென்னகையோடு அவளைப் பார்த்தான். 'பாருங்கள், உங்களுக்காக நான் ரோஜாப் பூக்கள் கொண்டு வந்திருக்கிறேன். என் தோட்டத்தில் பூத்த மென்மையான ரோஜாக்கள்.’’ அவள் சாஅதிமேல் ரோஜா மலர்களைத் தூவிள்ை. கவியின் வருத்தம் படிந்த முகத்தை, பளிச்செனத் திகழ்ந்த தன் விரல் துணிகளால் தொட்டாள். 'சொர்க்கசுந்தரி, நீ எனக்குத் தந்த ரோஜாக்கள் உலகத் திலேயே மிகச் சிறந்த மலர்களாகவே எப்போதும் விளங்கின. அவை வாடியதே இல்லை.” "ஆமாம் சாஅதி. ஒருவர் ரோஜாவின் மணத்தை நுகரும் போது, அது சீக்கிரமே வாடிவிடும் என்று ஏன் நினைக்கவேண்டும்? அதன் வாசனையை எண்ணிப்பார். மலர் எப்பவோ வாடி விட்டது என்ற நினைவை நீ சீக்கிரம் மறந்துவிடுவாய்.” ’’ கவி என்ருே சொன்ன வார்த்தைகளை நவியத் தன் வெள்ளிமணிக் குரலில் திரும்பச் சொன்னாள். அவள் அவன் அருகில் உட்கார்ந்தபோது, ஏகப்பட்ட கனவுகளை வரவழைத்த அவளது கூந்தல் சாஅதியின் முகத்தில் விழுந்தது. உடனே இனிய மென்காற்று ஒன்று, தனது வானவில் வர்ணச் சிறகுகளை அடித்தவாறு, தோட்டத்தின் வழியே விரைந்தது. சாஅதி தடுமாறும் தன் கையில்ை நளியத்தின் கனவுமயக் கூந்தலைத் தடவுகையில், காற்றில்