பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

魔器 சாஅதியின் கடைசி வசந்தம் படபடத்துச் சென்ற ஜூம்ருக்த் பறவையின் அற்புதச் சிறகுகள் தான் அது. பின்னர், தன்னைச் சுற்றிலும் தகதகத்த மோகினிக் கதை உலகத்தின்மீது, தன் ஆத்மாவின் அடித்தளத்திலிருந்து எழுந்த பார்வை ஒன்றைப் படரவிட்டான். இனிய காதலியின் பிரகாசமான புன்னகையை அவன் பார்த்தான். சூடான கண்ணிர் அவனது கிழ இதயத்தைப் புண்ணுக்கியது. அவளுடைய சின்னக் கையைத் தன் கையில் எடுத்தான். அதை முத்த மிட்டான். பிறகு அதை அவன் பதைபதைக்கும் தன் நெஞ்சோடு அழுத்தின்ை. 'எனது கடைசி வார்த்தைகளை என் குலிஸ்தான் காவியத்தின் கடைசிப் பக்கத்தில் உனது சின்னக் கையில்ை எழுதிவை : 'நமது சுய விருப்பத்தின்படி நாம் பிறப்பதில்லை. நாம் ஆச்சர்யத்தில் வாழ்ந்து, கவலையோடு சாகிருேம். ’’