பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஸ்டீபன் ஸோரியன்

29


"இல்லை. விலை ரொம்ப அதிகம்."

"நீ எவ்வளவு தருவாய்?’’

அவன் வேண்டுமென்றே விலையைக் குறைத்தான்.

"எழுபது கோப்பெக்."

"அப்படியானல் நஷ்டம்தான் ஏற்படும்!”

"என்னால் அதிக விலை தர இயலாது” என்று விருப்பமின்றிக் கூறிவிட்டு இளைஞன் வாசல் பக்கமாக விரைந்தான்.

"எண்பது கொடு."

"என்னால் முடியாது’ என்று இளைஞன் உறுதியான குரலில் தெரிவித்தான். கதவைத் திறந்து வாசல்படியில் கால் வைத்தான்.

"சரி சரி, வா. வந்து அதை எடுத்துக்கொள்’’ என்று கடைக்காரன் அவனை அழைத்தான். "வா... நீ நம்ம கேச்சன் மாமா மகனாக இருப்பதால், நாம் இதில் அதிகமாக எதுவும் பண்ணுவதற்கில்லே..."

இளைஞன் எதுவும் பேசாமல் திரும்பி வந்தான். எழுபது கோப்பெக்குகளை-அவனிடமிருந்த பணம் முழுவதையும் கொடுத்து, சர்க்கரைக் கிண்ணத்தை எடுத்துக்கொண்டு வெளியேறினான்.

சில நொடிகளுக்குப் பிறகு அவன் திரும்பவும் லால்தாத்ஸ்கி பஜார் வழியாக நடந்துகொண்டிருந்தான். அவன் கையில் பழைய மூட்டையுடன் புதிய சர்க்கரைக் கிண்ணமும் இருந்தது இப்போது.