பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாக்தாங் அனன்யன் (1905) துரோகி மாரிக்காலத்தின் ஒரு குளிர்ந்த நாளில் நாங்கள் ஒய்வு பெறுவதற்காக, பெர்சிய எல்லை அருகிலிருந்த மலையடிவாரக் குக்கிராமம் ஒன்றில் தங்கினேம். அங்கே இரவைக் கழித்துவிட்டு மறுநாள் காலையில் மலை ஆடுகளே வேட்டையாடப் போகலாம் என்று எண்ணிளுேம். நெட்டையாக உயர்ந்திருந்த ஒருவன் வீட்டில் நாங்கள் தங்கினேம். அவன் முகம் கோணலாய், வெளிறியும் வருத்தமாகவும் காணப்பட்டது. அதன் ஒரு பகுதி துண்டில் மூடுண்டிருந்தது. சுடர்விட்டு எரியும் கணப்பின் முன்னே நான் கிழக்கத்திய முறையில் உட்கார்ந்து, எனக்குப் பிடித்தமான பாணியில் வேட்டையையும் வேட்டைக்காரர்களையும்பற்றிப் பேசிக்கொண் டிருந்தேன். 'நான்கூட முன்னொரு காலத்தில் வேட்டைக்காரளுக இருந்தேன். ஆனல் அதை விட்டுவிட்டேன். அது ஒரு அயோக் கியத் தொழில்’’ என்று வீட்டுக்காரன் பெருமூச்சுடன் சொன்னன். 'ஒருவர் வேட்டையாடுவதை நிஜமாகவே விட்டுவிட முடியுமா?’ என்று என் கூட்டாளி கேட்டான். அந்த மனிதன் மறுபடியும் நெடுமூச்சு உயிர்த்தான். "மிகப் பெரிய பாம்பு ஒன்று என் வேட்டைக்கு முடிவு கட்டி விட்டது. ’’ 'இது சுவாரஸ்யமாக இருக்கிறதே' என்று நான் நினைத்தேன். - பேசாமல் இருந்த வீட்டுக்காரன், எங்கள் வற்புறுத்தலுக்கு இணங்கி, இறுதியாக மனமிளகி, பின்கண்ட கதையைச் சொன்னன்: கணப்பருகே அமர்ந்து, தனது ஹாக்காவைப் புகைத்தபடி அவன் சாவதானமாகக் கூறினன். @@ காலம் இருந்தது’ என்று அவன் ஆரம்பித்தான். "அப்போது என் முகம் கோணியிருக்கவில்லை. ஜனங்கள்