பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாக்தாங் அனன்யன் 63 கூண்டுக்கு ஒவ்வொரு புறமும் ஒரு கைப்பிடி இருந்தது. அதைப் பற்றித் துரக்கி, தங்கள் கொள்ளைப் பொருளை அவர்கள் உற்சாகமாகச் சுமந்து சென்ருர்கள். அவர்கள் என்னைக் கடந்த போது பாம்பு சட்டென்று தன் தலையை உயர்த்தியது. என்னை வன்மத்தோடு ஒரு பார்வை பார்த்தது. சீறிக்கொண்டு, விடுபட்டு வெளியேற முயற்சிப்பதுபோல் அது கூண்டின் இரும்புக் கம்பிகள் மீது உடலால் மோதியது. அது என்ன அடையாளம் கண்டது. அந்தக் கொடிய பிராணி என்னைக் கண்டுகொண்டது. நான் அதைக் காட்டிக் கொடுத்தேன் என்று அது புரிந்துகொண்டது. நான், முன்பு அந்தப் புரு செயலிழந்து நின்றதுபோல், அதே இடத்தில் அசையாது நின்றேன். பாம்பு திரும்பவும் என்மீது ஒரு உக்கிரப் பார்வை வீசியது. தன் தலையைக் கம்பிகளோடு அழுத்தி, மஞ்சளும் பச்சையும் கலந்த விசித்திரமான எச்சிலை என் முகத்தை நோக்கித் துப்பியது. என் வலது கன்னத்தில் இருந்த ஒரு சிறிய புண்ணில் வந்து பட்டது. அது.

  • ஏ, கேவலமான நாயே! உனக்காக நான் கவலைப் பட்டேனே. உன்னை நன்கு கவனித்து, நரகக் குழியிலிருந்து சூரிய வெளிச்சத்துக்கு இட்டு வந்தேனே. பதினைந்து துமான் களுக்கு நீ என்னை விற்கவேண்டும் என்பதற்காகத்தாளு நான் உன் உயிரைக் காப்பாற்றினேன்? அசிங்கம் பிடித்த சின்னப் பயலே; உன் துரோக நெஞ்சின்மீது நான் காறித் துப்புகிறேன்’ என்று பாம்பு சொல்ல விரும்பியதுபோல் அது அமைந்தது.

நான் பயந்து கூச்சலிட்டு மயங்கி விழுந்தேன். அப்புறம் என்ன நடந்தது என்றே எனக்கு நினைவில்லை. இதற்குப் பிறகு பல மாதங்கள் நான் அரைப் பைத்தியமாக இருந்தேன். பகலும் இரவும் அந்தப் பாம்பு என் கண்முன் நின்றது. அது தன் பற்களிலிருந்து உறிஞ்சிய விஷம் அந்த எச்சிலில் கலந்திருந்தது. என் முகத்திலிருந்த புண்ணுக்குள் புகுந்து அந்த விஷம் முகத்தைத் தீய்த்து, அதைத் தின்றது. முடிவில், என் கன்னம் அழுகத் தொடங்கியது. சதை துண்டு துண்டாக உதிர்ந்தது. நான் இப்போது இருக்கிற நிலைமை இப்படித்தான் ஏற்பட்டது.” நெட்டைச் சுலைமான் தனது ஹ"க்காவை உறிஞ்சினன். கணப்பில் கிடந்த கரித்துண்டுகளைக் கிளறினன். ஒரு பெரு மூச்சுடன் சொன்னன் : "ஆமாம், சகோதர வேட்டைக்காரர்களே இதுதான் என் கதை.’’