பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 வெள்ளே ஆட்டுக்குட்டி அவன்மேல் வைத்த கண்ணை என்னல் திருப்பவே முடியவில்லை. ஆண்டவன் உனக்கு அருள்புரியட்டும்.’’ கிழவன் உணர்ச்சி துளும்பிய குரலில் நன்றி' என்ருன். அவன் முற்றத்தைச் சுத்தப்படுத்துவதில் ஆர்வமாக ஈடுபட்டான். முதலில் அவன் அசுத்தங்களை அகற்றினன். 'என் பையன் செருப்புகளை அசிங்கமாக்குவதை நான் விரும்ப மாட்டேன்.” அப்புறம், துருத்திக்கொண்டிருந்த ஒரு ஆணியை கல்லினல் அறைந்து தட்டினன். அர்ஷாக்கின் கை அதிலே பட்டால், அவன் சட்டை கிழிந்துபோகும்.’’ நவசார்த் கதவைத் திறந்தான். வெறும் சுவர்மீது ஒரு கட்டில் கவனிப்பற்றுச் சாய்ந்திருந்தது. அர்ஷாக், நீ இந்தக் கட்டிலில் படுத்து உறங்கியது நினைவிருக்கிறதா? நான் இங்கே தரையில் துரங்கினேன் என்று அவனிடம் சொல்லுவேன்.' இப்படி உரக்கச் சிந்தித்தவாறே அவன் கட்டிலைச் சரிப்படுத்தினன். 'இதுதான் நீ சாப்பிட்ட பழைய கிண்ணம். பார், அர்ஷாக்! இதோ உன் மரக்கரண்டி. தச்சன் மானஸிடமிருந்து நான் இதை வாங்கி வந்த நாள் உனக்கு நினைவிருக்கிறதா? அதில் பூ வேலைப் பாடு எதுவும் இல்லையே என்று நீ கோபம் கொண்டாய். உடனே நான் அதை ஒவியனிடம் எடுத்துப்போய், உனக்காக வர்ணம் தீட்டச் செய்தேன் என்று அவனிடம் கூறுவேன்.” இவ்வாறு நினைப்பிலேயே அர்ஷாக்குடன் உரையாடிக் கொண்டு, அவன் ஊற்றுக்குப்போய் கொஞ்சம் தண்ணிர் எடுத்து வந்தான். முற்றத்தை , மெத்தையை, உட்புறத்தின் தரையை, தண்ணீரால் தெளித்தான். பிறகு பெருக்கத் தொடங்கினன். மீண்டும் அடுத்த வீட்டுக் கிழவியின் தலை வேலிக்கு மேலே தோன்றியது. 'நவசார்த், அர்ஷாக் சேர்மன் வீட்டுக்குப் போயிருக்கிருன், தெரியுமா?’’ 'தெரியாதே. அங்கே அவன் எப்போது போனன்?’’ ‘'நீ வருவதுக்குச் சற்று முன்புதான்.” 'வீட்டில் யாரும் இல்லை என்பதை அவன் பார்த்திருக்க வேண்டும். அதனல் ஒய்வெடுக்க அங்கே போயிருப்பான். அவன் வந்து சேருவான். வழி தவறிவிட மாட்டான்.” "நிச்சயமாக..”* நவசார்த் சிறிதளவு விறகுச் சுள்ளி எடுத்துவந்து, வெளிப்புற அடுப்பின் பக்கத்தில் அடுக்கிவைத்தான். பிறகு இடுப்பு