பக்கம்:ஆறுமாதக் கடுங்காவல்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆறுமாதக் கடுங்காவல் 97 பாள். இப்படி வாழ்வின் ருசியைப் பற்றி எண்ணிக் கொண்டு படுத்திருந்த இளைஞன் தலையிலே மென்மை யான ஒரு 'தட்டு' விழவில்லை. துப்பாக்கிக் குண்டு விழுந் தது! மண்டையைப் பிளந்து - தலை சிதறிப்போய்விட் டது. "வரப்போகும் இல்லாள் மெல்லிய விரல்களால் வரு டுவாள் இந்தத் தலையை " என்று நினைத்துக் கிடந்தானே; அந்தத் தலையை துப்பாக்கிக் குண்டு சுக்கு சுக்காக்கிவிட் டது. அவனால் இனி நினைக்கமுடியாது! மூளை சக்கை சக்கையாகிவிட்டது. வாயை மாத்திரம் ஆவ் ஆவ் என்று பிளந்தானாம் - ஆயிரம் முறை ! என்ன சொல்வதற் காகப் பிளந்தானோ? 66 எப்படி வேதனையிருந்ததோ! அம்மாவுக்குக் கடை சிச் சேதி சொன்னானே - அல்லது - அட பாவிகளே! என்னையேன் என் தாயிடமிருந்து பிரித்தீர்கள் என்று கதறுவதற்காக வாயைப் பிளந்தானோ தெரிய வில்லை. சாவைத் தழுவிவிட்டான்; கே காமளவ ளவல்லியைத் தழுவப் போவதை நினைத்து மகிழ்ந்தவன் - கொடியோர் வீசி யெறிந்த சாவைத் தழுவிவிட்டான். கல்லக்குடிகளத் திலே - பிணக் கோலம் பூண்டான், மணக்கோலம் பூண வேண்டியவன்! ஒரு பிணம் விழுந்தது! - ஆனால் பிணவரிசை முடிய வில்லை! யானைத்தீப் பசி கொண்ட ஆட்சிக்கு ஒரு பிணம் போதுமா? போதாது!