பக்கம்:ஆறுமாதக் கடுங்காவல்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

98 கருணாகிதி நடராசன் இந்தி எதிர்ப்புப் போராடத்திலே இதே ஆச்சாரியார் என்ற ஒரு ஆட்சியி தாளமுத்துவுடன் நடராசன் 0 தோழனை பலி கொடுத்தோம் சிறைச்சாலையிலே! இதோ இன்னொரு நடராசன் - லால்குடி வீரன் - கழகத்து தீரன் - களப்பலியானான் கல்லக்குடி அறப்போர் முனையிலே! போராட்டத்திலே படை வரிசையிலே கலந்துகொள்ள ஓடோடிவந் தானாம் -ஐநூறுக்கு மேற்பட்ட தொண்டர் கள் பதிவு செய்யப்பட்டு களத்திற்கு வரவேண்டிய நாளும் குறிக்கப்பட்டுவிட்டதால் - அந்தப் பட்டியல் முடிந்த பிறகே நடராசனுக்கு இடம் கிடைக்கும் என்று சொல் லப்பட்டதாம். மனம் நொந்து திரும்பியிருக்கிறான் ஊருக்கு! போகும் வழியிலே புகைவண்டியிலே பிணமா னான். கையிலே 'நம் நாடு' இதழ்! படித்தானோ படிக்க வில்லையோ - இதழிலே நம் நாடு என உச்சரித்தபடியே இறந்துபட்டான்! அய்யோ - இல்லை இல்லை - சாகடிக்கப் பட்டான்! தையல் தொழிலாளி - தாறுமாறாகக் கிழிக்கப்பட்டு விட்டது அவன் கழுத்து! பாய்ந்துவந்த குண்டு அந்தப் பருவ ளைஞனின் கழுத்துச் சதையை கொத்திக் கொண்டே போய்விட்டதாம். "யார் பெற்ற பிள்ளையோ” என்று ரயிலில் இருந்தவர் கள் கதறியிருப்பார்கள். அத்தப் பிள்ளையைப் பெற்றவர் கள் என்ன பாடு பட்டிருப்பார்கள் - துப்பாக்கிக் குண்டுக் குத் தெரியாது! துரைத்தனம் புரிவோருக்குத் தெரியும். ஆனால் அவர்களுக்கு இது பொழுதுபோக்கு! அம்மா! திராவிடத் தாயே! இதோ நீ பெற்றெடுத்த நடராசன்! பொன்னையும் - மணியையும் - வாரி வழங்கும்