________________
102 கருணாநிதி 5. அழுதது சார்லஸ் காலத்திலே ஆங்கிலத்து மண் வீண் போகவில்லை! லூயிக்கு நேராக பிரெஞ்சு பூமி விட்ட கண்ணீர் பயனற்றுப் போகவில்லை! ஜாருக்கு நேராக ரஷ்யத் தாய் சிந்திய கண்ணீர் ஆறு. நல்லதோர் விளைவைத்தான் தந்தது! இன்று - நீ நேருக்குநேர் விடும் கண்ணீர் இந்தப் பாருக்கு உன் நிலையை உணர்த்தத்தான் போகிறது! கண்ணீரால் தூக்கிக்கொடு ஆறு மைந்தர்களை குளிப்பாட்டிக்கொடு உன் கண்மணிகளை! அவர்களை செந்நீரால் குளிப்பாட்டியவர்கள் செல்லட்டும் சிரிப்போடு! ஆனால் தாயே! அந்த சிரிப்பு நீடிக்காது! நீடிக்க விடமாட்டோம் மிஞ்சியுள்ள உன் கொஞ்சு மொழி மைந்தர். உயிரோடு ஆறுபேரை விழுங்கிய உதிரவாய்க் 'காளி க்கு' வயிற்றிலே கொஞ்சம் இடம் காலி - அதற்காகக் கல்லக்குடியிலே சந்தனம் ஜோசப்பின் இடதுகை முழு வதையும் முறித்துப் போட்டுக்கொண்டது. அப்போதும் கொஞ்ச இடம் காலி - தூத்துக்குடி ஆசிரியர் குருசாமியின் இடதுகாலை வாழைப்பழம்போல் எடுத்து வயிற்றுக்குள் போட்டுக்கொண்டது. ரத்த விருந்து முடியவில்லை - பதினாறுவயது இளை ஞன் ராமச்சந்திரனின் பச்சைத் தொடைக்கரி -வாலிபன் சண்முகத்தின் கணுக்கால் சதை - ரங்கநாதன் குடல் கரி -கோம்பன், கிருஷ்ணன், செல்லையா, சேர்மன், வேணு லிங்கம், சுடலை, முனுசாமி,ரத்தினம், ஈஸ்வரன், சதாசிவன், அண்ணாமலை, முனுசாமி, நாராயணன், செபாஸ்டின் ஆகி