பக்கம்:ஆறுமாதக் கடுங்காவல்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆறுமாதக் கடுங்காவல் 103 யோரிடம் ஆளுக்குக் கொஞ்சம் - எலும்பு, ரத்தம், சதை -- இவ்வளவும் சாப்பிட்டானபிறகு தான் ஆறுபேரை விழுங் கிய அகிம்சாப் 'பிடாரி' ஏப்பம் விட்டாள். ஒருநாள் உணவு முடிந்தது என்றாள். "உயர்க அசோ கச் சக்கரக்கொடி! இன்னும் உயர்க ! விண்ணில் உயர்க! மண்ணில் உயர்க!” என்று பாட ஆரம்பித்தாள்! ரத்த போதையில் குதித்தாள் - குதித்தாள் - சித்தம் கலங்கி சிரித்தாள் - சிரித்தாள் - ஆறு உயிரோடு விட் டாளா - அநேகர் குருதியோடு நின்றாளா - அகப்பட்ட போதே இரையைத் தேடிக் கொள்வோம் என்று ஐயாயிரம் தோழரை அகிம்சா குகைக்குள் அள்ளிப்போட்டாள்.ஒரே நாள் - ஜூலை 15! - ஆறு உயிர்! அநேகர் சித்திரவதை! ஐயாயிரம்பேர் சிறைச்சாலைகளில்! எங்கே வாழ்கிறோம்? - திராவிடத்தில்! எதோடு இணைந்து?- இந்தியாவோடு! யார் காலத்தில்? - காந்தியாரின் வாரிசு காலத்தில்! என்ன குற்றம் செய்தோம் ? விடுதலை கேட்டோம்! ஆறு பிணம் -ஐயாயிரம் பேர் சிறையில் ! மறவாதீர்! - அதை மறவாதீர்! சரித்திர ஆசிரியர்களே! குறித்துக்கொள்ளுங்கள். காவியம் தீட்டுவோரே! குறித்துக்கொள்ளுங்கள். பாடல் புனைவோரே! குறித்துக்கொள்ளுங்கள். கி. பி. 1953 சொல்லுகிறது - கி. மு. அல்ல ! விடுதலை கேட்பது குற்றமாம் ! அதற்குத் தண்டணை ஆறு பிணம்! ஐயாயிரவர் சிறையில்! குறித்துக்கொள்ளுங்கள்.