பக்கம்:ஆறுமாதக் கடுங்காவல்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சிறை தான், படைக்கும் அந்தி வானத்தையும் வெற்றி கொள்ளும் சிவப்பு நிறத்தைப் பூமியிலே கண்ட சூரியன் வெட்கித் தலை குனிந்து மறைந்தான். போலீசாரின் பாது காப்பு வளையத்துக்குள்ளே - கல்லக்குடியில் நாங்கள் சுருண்டு கிடந்தோம்- இந்த சோகச் செய்திகளை காதில் வாங்கியபடி! இரவு 12 மணிக்கு மேலிருக்கும். அரை மசால்வடைத் துண்டும், கால்கோப்பைத் தேநீரும் கொண்டுவந்து தந் தனர் மணியும் முத்துவும் மற்ற நண்பர்களும்! அதுதான் எங்களுக்கு சரியான காலத்தில் கிடைத்த அருமையான இரவு உணவு. ஒருவர் காலை ஒருவருக்குத் தலையணையாக அமைத்துக்கொண்டு மும்பத்தாறுபேரும் தூங்கினோம். கதவுகள் அடைக்கப்பட்டிருந்தன. துப்பாக்கி சகிதம் ரிசர்வ் போலீஸ் காவல் நின்றுகொண்டிருந்தது. எங்களுட னேயே இருந்த சப் இன்ஸ்பெக்டர் அந்த நடுநிசியில் திடீ ரென எங்களை எண்ணிட ஆரம்பித்தார். என்ன ஆச்சரி யம்; முப்பத்தாறுபேரும் சரியாக இருந்தோம். வழக்கம் போல் இரண்டு மூன்று முறை எண்ணியபிறகு அவ ருடைய கணக்கு முடிவு பெற்றது. புயலுக்குப் பின்னுள்ள அமைதியோடு மறுநாள் பொழுது புலர்ந்தது! கண்ணதாசன் முதலிய நண்பர்கள் வைத்தியசாலை யில் சேர்க்கப்பட்டுள்ளார்கள் என்ற செய்தி கிடைத்தது.