பக்கம்:ஆறுமாதக் கடுங்காவல்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

112 எங்கள் கூண்டு : நான் கருணாநிதி ராமசுபபையா வேணு - சத்தி - கஸ்தூரி கோபால் - மலைக்கோட்டை ரத்தினம் -அரியலூர் எத்திராஜ்- மற்றுமொரு நண்பர் ஆகிய எட்டுபேர் அடைக்கப்பட் டோம். காலடியால் சுமார் பத்து அடி நீளமும் -எட்டு அடி அகலமும் உள்ள அந்தக் கொட்டடியில் எட்டுபேர்! அதிலும் பாதிக்குமேல் பயன்படுத்த முடியாத இடம். பெண்கள் அடைபட்டிருந்த கூண்டு. நாங்கள் சென்றதும் அவர்களை வேறு இடத்திற்கு மாற்றிவிட்டு மாற்றிவிட்டு அந்த இடத்தை எங்களுக்கு அளித்தார்கள். சிறுநீர் கழிக்கப் பட்டு எங்கள் மூக்குகளை யெல்லாம் கம்பிக்கு வெளியே நீட்டித்தான் மூச்சை சுவாசிக்கவேண்டும் என்ற நிலைமை யிலே துர்நாற்றம் வீசிக்கொண்டிருந்தது. ய மாலை 5 மணிக்கு எங்களைத் திறந்துவிட்டார்கள். மலஜலம் கழிப்பவர்கள் போகலாமென்று -'கக்கூஸ்' என் று சொல்லப்படும் ஒரு இடத்தை காண்பித்தார்கள். “லாங் ஜம்ப் " தெரிந்தவர்கள் தான் உள்ளே சென்று அமர முடியும். காரணம் கால்,வைப்பதற்காகப் போடப்பட்டிருக்கும் அந்தக் கற்கள் ஒன்றுக்கொன்று இடையே அவ்வளவு தூரத்திலிருந்தன. பிறகு சாப்பிடுமிடத்திற்குக் கூப்பிட்டார்கள். குப் பையும் கூளமும் சேர்ந்த ஒரு தரையிலே - ஆமாம் - புழுதி மண்ணிலே - உட்காருங்கள் என்றார்கள். உட்கார்ந்தோம். உணவு வந்தது. இல்லை - இல்லை... ஆளுக்கொரு சட்டி வந்தது - மண் சட்டி! பிறகுதான் உணவு வந்தது.