பக்கம்:ஆறுமாதக் கடுங்காவல்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆறுமாதக் கடுங்காவல் 11 திருச்சி சுற்றுப்பயணத்தைத் துவக்கவேண்டிய முக்கியத் துவம் கருதி ஆகாய வழியைத் தேர்ந்தெடுத்தோம். டாடை உ உ விமானத்தில் பிரயாணிகள் எதை எதை எண்ணிக் கொண்டிருந்தார்களோ தெரியாது; நானும் சத்தியும் மேலிருந்தபடியே பூமியை நோக்கினோம். பச்சைப் பட் டுத்திய திராவிடத் திருமாதா, தன் நதிக் கரங் களால் உழவர் பெருமக்களை சீராட்டிப் பாராட்டிக்கொண் டிருந்தாள். கம்பீரமான தோற்றம் - கனிவு நிறைந்த கண் கள் கருணை பொழியும் வதனம் - எழிலாடும் எங்கள் தாய்க்கு அணிகலன்களாக இருந்தன என்றாலும் - தாயின் முகத்திலே குறுமறுக்கள் கிளம்பியிருப்பதாகத் தெரிந் தன கோயில்களின் உயர்ந்த கோபுரங்கள். எங்கள் தாய், அடிமைப்பட்டவள் என்பதை எண்ணினோம். கண்களிலே குளம்! அன்னையின் நிலை கண்டு ஆகாயத்திலிருந்தப - நாங்கள் படியே இருவர் தான் அழுகிறோமா என்று திரும்பிப் பார்த்தோம். பக்கத்திலே ஒரு பாவையும் அகம் அழுவதை முகத் தால் காட்டிக்கொண்டிருந்தாள். விமானப் பிரயாணிகளை உபசரிக்கும் பொறுப்புவாய்ந்த அலுவலில் ஈடுபட்டிருக் கும் அந்த இள நங்கை ஏனிப்படி வாட்டமாயிருக்கிறாள் என்பது முதலில் புரியத்தானில்லை. பிரயாணம் செய்பவர் களுக்கு அலுப்பு தெரியாமல் - அச்சம் தோன்றாமல் - விபத்துகளைப் பற்றிய எண்ணம் வராமல் கண்யமான புன்னகை காட்டி பவ்யமாக பத்திரிகைகளை நீட்டி- பழரசம் தந்து - பணி சில புரிந்து -பாதுகாத்திட வேண் டிய பதவியிலுள்ள அந்தப் பாவை ஏனிப்படி துன்பக் கேணியில் தள்ளப்பட்டிருக்கிறாள் என்ற கேள்விக் கணை கள் என்னைவிட அதிகமாக என் நண்பர் சத்தியைத்