பக்கம்:ஆறுமாதக் கடுங்காவல்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆறுமாதக் கடுங்காவல் 117 டிரேட் வந்தார். 'இன்றைய தினமே உங்கள் விசாரணை இருக்கிறது' என்று கூறிவிட்டுப் போனார். சிறிது நேரத்தில் எங்களை அழைத்தார்கள். சென் றோம். நீதி மன்றம்! அங்கே நாங்கள் - முதலில் ஐவர் விசா ரிக்கப்பட்டோம். பின்னர் ராமசுப்பையாவும் முப்பது தோழர்களும் விசாரிக்கப்பட்டனர். டால்மியாபுரம் பெயரை மாற்றவேண்டுமென்று வரி கொடுக்கும் பிரஜைகளின் சார்பாகக் கிளர்ச்சி நடத்தியது குற்றமாம்! கல்லக்குடி எனும் தமிழ்ப் பெயரை விரும்பியது தகாத செயலாம்! சட்டமோ எந்த என்ன சொல்லுகிறதாம்! - செக்ஷனோ - அப்படிச் அப்பட்டமாக அப்படிச் சொல்லாவிட்டாலும் - உண் மையை மறைத்து - சட்டத்தின் துணையால் வழக்கு நடத்துகிறது ஆட்சி பீடம் ! “நீங்கள் ஏன் மக்கள் கோரிக் கையை நிறைவேற்றக் கூடாது? ' “ என்று கேட்பதற்கு சட்டத்திற்கு நாக்கில்லை. இருந்த நாக்கும் அறுக்கப்பட்டு விட்டது இங்கே ! 66 நீங்கள் எப்படி கோரிக்கை யனுப்பலாம்?" என்ற பொருள்படும் கேள்வியை ஜாடைக் குறிகளால் - ஊமை பாஷைகளால்-கேட்டிடும் திறமை சட்டத்திற்கு இருக் கிறது!