பக்கம்:ஆறுமாதக் கடுங்காவல்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

118 கருணாநிதி ஆகவேதான். நாங்கள் ஈடுபட்ட அறப்போருக்கு களங்கம் கற்பித்தது. 66 66 நீங்கள் குற்றம் செய்திருக்கிறீர்கள் அல்லவா?" குற்றமல்ல - குறிக்கோளை நிறைவேற்ற கையாண்ட அமைதியான முறை தானிது! " "உங்கள் செயல் குற்றமாகத்தான் கருதப்படு கிறது. "" "சட்டப்படியிருக்கலாம் - நியாயப்படி அல்ல " நீதிமன்றம் தீர்ப்பு வழங்கத் தயாராகிவிட்டது. வெளி யிலே நூற்றுக்கணக்கான மக்கள் தீர்ப்பை எதிர்பார்த்து நின்றனர்; மழைக்கிடையிலேயுங்கூட! ராமசுப்பையாயும் முப்பது தோழர்களும் இரண்டு மாதம் கடுங்காவல் அனுபவிக்கவேண்டும். முப்பத்தி ஐந்து ரூபாய் அபராதம் - கட்டத்தவறினால் ஒரு மாதம் சிறை ! மொத்தம் மூன்று மாத தண்டனை. சட்டம் கொட்டிவிட்டது அவர்களை! எங்கள் பக்கம் திரும்பியது சட்டம் - ஐந்து மாதக் கடுங்காவல் - முப்பத்திஐந்து ரூபாய் அபராதம் - கட்டத் தவறினால் ஒரு மாதம் சிறை-ஆக மொத்தம் ஆறு மாதத் தண்டனை. ஒரே குற்றம் - இரண்டுவித தண்டனை ! போராட்டத் தலைவன் என்ற முறையில் எனக்கும்- என்னுடன் சேர்ந்த நால்வருக்கும் ஆறு மாதம்!