பக்கம்:ஆறுமாதக் கடுங்காவல்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆறுமாதக் கடுங்காவல் 119 அடுத்த படைவரிசை யென்ற முறையில் மற்றவர் களுக்கு மூன்று மாதம்! · அவர்களிலே ஆறுபேர் முதல் அதுவும் தவறு படைவரிசையிலே கைது செய்யப்பட்டவர்கள். · ஆறு எப்படியோ; சட்டம் நெளிந்துவளைந்து மாதம் - மூன்று மாதம் என்று பரிசுகளை அளித்து மகிழ்ந்தது! 17ந் தேதி மாலை 6-30 மணி சுமாருக்கு தண்டனை பெற்றோம். தமிழர் மானத்துக்காகப் பரிசு பெற்றோம் ! போராடியதற்கு நமக்கு "என்ன சார் ; அவர்களுக்கு மூணுமாதம் ஆறு மாதம்?' என்று சிறித்துக்கொண்டே கேட்டார் சத்தி. 66 ஆமாம் நமக்கு ஆறுமாதம் தான் " என்றேன். "ஏன் அப்படி?" என்றார் வேணுகோபால். "அதற்குமேல் தண்டனை தர அரியலூர் கோர்ட் டுக்கு அதிகாரமில்லை ! ” என்றேன். தீர்ப்பு கேள்வியுற்ற அரியலூர் மக்கள் மாஜிஸ் டிரேட் கோர்ட்டுக்கு முன்பு திரளாக நின்றிருந்தனர். கூட்டம் கலைந்தபிறகு எங்களை அனுப்பவேண்டும் என்ற திட்டத்துடனோ - என்னவோ - கோர்ட் வாசலிலேயே நல்ல இருட்டில் எங்களை உட்கார வைத்துவிட்டனர்.