பக்கம்:ஆறுமாதக் கடுங்காவல்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

120 கருணாநிதி ஆகாகா! ஒரு முக்கியமான விஷயத்தை மறந்து விட்டேனே ! - மாலையில் எங்களுக்கு மஞ்சல் சோறு போட்டுத்தான் பிறகு தீர்ப்பு கூறினார்கள்.

ே ம போடட்டும் - அரியலூர் நரகத்திலிருந்து மன்னிக்கவும். நகரத்தி லிருந்து வேறு சிறைச்சாலைக்கு அனுப்பப்போகிறார்களே என்ற மகிழ்ச்சி எங்கள் எல்லோருக்கும் ! மூன்றுமாத தண்டனை பெற்றவர்களுக்கெல்லாம் முகம் சுருங்கிவிட் டது! வாடிவிட்டது - வதங்கிவிட்டது - காரணம்; எங் களுக்கு ஆறு மாதம் கிடைத்துவிட்டதாம் ; அந்தப் பொறாமையால் தான் - வேறென்ன!

ஆறுமாதமென்ன ஆறுவருட "வாழ்க எம் நாடு!" என்று ஒலித்த குற்றத்திற்கு நீதிமன்றம் தந்த பரிசு கண்டு கண்ணீர் சொட்டுவது போல் வானம் மழையைக் கொட்டிற்று. டி - மின்னல் - பெருமழை! இரவு 8 மணி சுமாருக்கு எங்களில் இருபத்தைந்து பேர்களை ஏற்றிக்கொண்டு போலீஸ் வண்டி புறப்பட்டது. மிச்சம் பதினோறு தோழர்களுக்கு வண்டியில்லாததால் - பிடியுங்கள் சாபம்! இன்னும் ஐந்தாறு நாட்கள் அரிய லூர் ஜெயிலில் இருங்கள் " என்று அவர்களை மட்டும் அங்கேயே வைத்துக்கொண்டனர். 46 நாங்கள் இருந்தவண்டி இருட்டையும் இடை யிடையே தோன்றிய மின்னலையும் - மழையையும் கிழித் துக்கொண்டு திருச்சி நோக்கிப் புறப்பட்டது. வெளியிலே எவ்வளவு மழை பொழிகிறது என்பதை எங்களால் கணக்கிட முடிந்தது - எப்படியென்கிறீர்களா-