பக்கம்:ஆறுமாதக் கடுங்காவல்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆறுமாதக் கடுங்காவல் 125 சிறிய வாயில் எங்களை அழைத்தது. வெளியுலகத்தை இனி ஆறுமாதத்திற்குப் பிறகுதான் பார்க்கமுடியும் என் பதால் ஆசை தீர ஒருமுறை பார்த்தோம். பிறகு அடி யெடுத்து வைத்தோம், உள்ளே! எங்களை உள்ளே தள்ளி யதும் சிறையின் அந்த சிறிய உதடுகள் மூடிக்கொண்டன. "மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை - எமை மாட்டீ நினைக்கும் சிறைச்சாலை' 66 பாரதி தாசனின் அந்த இலட்சிய வரிகள் இதயத் தில் புதிய இன்பம் இசைத்தன. ஆறு மாதம் என்று கேள்விப்பட்டதும் அதிர்ச்சி யடைந்தோம் என்றார் தோழர் வாணன். அவரும் நண்பர் செழியனும் எம்மைப் பார்க்க வந்திருந்தபோதுதான் அப் படிச் சொன்னார்கள். எத்தனையோ அதிர்ச்சிதரும் செய்திகளை சந்தித் திருக்கிறது திராவிடர் இயக்கம். வேலாயுதத்தை பட்டப்பகலில் கொலை செய்தார்கள். தாளமுத்து நடராசனை சிறையில் பிணமாக்கினார்கள். நெல்லிக்குப்பத்தில் இளைஞன் ம.ஜீதை குத்திக் கொன்றார்கள். வடசென்னை பாண்டியனின் உ உயிரைக் குடித்தார்கள். இவ்வளவும் காந்தீயத்தின் பெயரால் நடைபெற்ற கொலை விழாக்கள்.