________________
126 கருணாநிதி இந்தக் காட்டுமிராண்டித் தன்மைக்கு ஒரு முடிவு ஏற் படுத்த கழகம், தியாகத் தீயில் குதித்திட வேண்டிய அவ சியம் - அவசரம் - முறை-துறைகள் பற்றியெல்லாம் செழி னும்,வாணனும் - நாங்களும் சேர்ந்து பேசிய எண்ணங் களை சென்னை கடற்கரை எத்தனையோ தடவை கேட்டி ருக்கிறது. செழியன் - வாணன் - இயக்கத்திற்கு அமைந்த ஒரு உலைக்களங்கள் போல! அவர்கள் சொன்னார்கள் அ திர்ச்சியடைந்தோம் என்று! பயத்தால் அல்ல! பாசத் தால்! அனைவரும் எதிர்பார்த்த புதிய அத்தியாயம் ஆரம்பமாகிவிட்டது என்கிறபோது அதிர்ச்சியினிடையே எழுகிற ஆனந்தமிருக்கிறதே - அது எல்லையற்றது. அத் தகைய ஆனந்தம் எம்மை உந்தித் தள்ள சிறைக்கோட் டத்திற்குள் பிரவேசித்தோம். எங்கள் ஒவ்வொருவருக்கும் அடையாள எண்கள் தரப்பட்டன. ஆமாம் - எங்கள் வேட்டிகளிலே எழுதப் பட்டன. 66 வீட்லே என்னுடைய எண் மூன்று! மூன்றாவது பிள்ளை நான். து தவமிருந்து பெற்ற பிள்ளை இப்படி சூனாமானாவாகி விட்டதே யென்று சுற்றத்தார் சொல்லுவார்கள், முன்பெல்லாம்! பள்ளிக்கூடத்திலே என் னுடைய எண் விட்டேன். மறந்து S. S. L. C. தேர்விலே என்னுடைய எண் தோல்வியடைந்த எண் - சொன்னால் அந்த எண்ணுக்கு அவமானம் ஆகையால் சொல்ல வேண்டாம்! சிறைச்சாலையிலே க்கு மாட்டிவிடப்பட்ட சிங்காரப் பதக்கத்தின் எண் 5779!