________________
ஆறுமாதக் கடுங்காவல் 127 இன்னும் எத்தனை எண்களை சந்திக்கவேண்டுமோ; ஆனாலும் அந்த முதல் முறையாகப் பெற்ற எண்ணை மறந்துவிட முடியாது. C. P. என்று சொல்லப்படும் CLOSE PRISON க்கு கொண்டு செல்லப்பட்டோம். முன்னூறுக்கு மேற்பட்ட நமது தோழர்கள் "வருக! வருக!" என அழைத்தார்கள். ஆண் டு கட்டப்பட்ட அந்த சிறைச்சா சாலையில் அப்போது மூட்டிவிடப்பட்ட அடுப்பு இன்னும் அணைய தொடர்ந்து எரிந்துகொண்டேயிருக்கிறது. 1865ம் வில்லையாம் வெள்ளைக்காரன் காலத்தில் ஆயிரம்பேருக்கு அதிக மாக கைதிகள் அடைபட்டதில்லையாம் அந்த சிறையில் ! நமது காருண்ய காங்கிரஸ் சர்க்கார் வந்தபிறகு மூவாயிரம் பேருக்கு குறைந்ததே கிடையாதாம்; கைதி களின் தொகை. ஒரு சிறு கிராமத்துக்குள் நுழைந்தது போலவே யிருந்தது எங்களுக்கு. சலவை செய்யப்படும் இடம் உண்டு. தலையலங் காரம், முக அலங்காரம் செய்வோர் உண்டு. வைத்திய சாலை உண்டு. தொழிற்சாலைகள் உண்டு. பாடபோதனை இல்லாவிட்டாலும் பள்ளிக்க கூடம் உண்டு. வாசகசாலை உ - ண்டு. பள்ளிக்கூடம் மருத்துவமனை இரண்டைத் தவிர - பிற எல்லா தொழில்களையும் அங்குள்ள கைதி களே நடத்துகிறார்கள். கைதிகளுக்காக கைதிகளால் நடத்தப்படும் ஒரு சின்னஞ்சிறிய ராஜ்யத்துக்குள் பிர வேசித்திருப்பதாகவே நாங்கள் உணர்ந்தோம்.