பக்கம்:ஆறுமாதக் கடுங்காவல்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆறுமாதக் கடுங்காவல் 129 வும் நழுவாதவர். அவருடைய தலைமையிலே தான் ஜெயி லரைச் சுற்றித் தோழர்கள் நின்றுகொண்டிருக்கிறார்கள். ஜெயிலர் அவர்களுக்கு சமாதானம் கூறுகிறார். 66 அரசாங்க உத்திரவை எம்மால் மாற்ற முடியாது. காலையில் கஞ்சி தரும்படியாகத்தான் எங்களுக்கு சட்ட மிருக்கிறது - நானென்ன செய்வது 66 இது ஜெயிலர்! அரசியல் கைதிகளுக்கு தனிச் சலுகை கேட்டவர் கள் - இப்போது ஆளவந்தவுடன் அதை மறுக்கலாமா?" இது தோழர்கள் ! ஜெயிலர் சிரிப்பைத்தான் பதிலாகத் தரமுடிந்தது நான் குறுக்கிட்டேன் - நாராயணசாமியும் னுடன் ஒத்துழைத்தார். என் 66 அரசாங்கத்திடம் நேர்மையை எதிர்பார்க்க முடியா தென்றுதானே அறப்போர் துவங்கி யிருக்கிறோம் -ஆல் கால மரத்தையே ஆணிவேரோடு பிடுங்கும் ஆரம்பப் போராட்டத்தில் குதித்திருக்கிற நாம், இந்தச் சிறுசிறு கிளைகளைப்பற்றிக் கவலைப்படக்கூடாது "" வாங்கிக்கொள்ளுங்கள் என்றேன் . தோழர்கள் உடனே. பறந்தனர் தட்டுடன்! - கஞ்சியை கையினில் அந்த கண்ணியம் நிறைந்த கட்டுப்பாடு கண்டு ஜெயிலர் அதிர்ச்சி அடைந்து விட்டார்.