பக்கம்:ஆறுமாதக் கடுங்காவல்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

132 கருணாநிதி சிறையிலே அந்த மத்யதி சர்க்கார் தேவை! காரணம் அது சிறை பூமி! திராவிடத்திற்கு தேவையில்லை வடநாட்டு மத்திய சர்க்கார்! காரணம் இது சுதந்திர பூமி ! திருச்சி சிறையில் எங்கள் திராவிட ராஜ்யம் ஆரம்ப மாகிவிட்டது. அந்த ஆரம்ப வேலைகளில் தோழர் ராமதாஸ் என்பவர் என்னுடனிருந்து துணைபுரிந்தார். 66 ஒவ்வொரு பிளாக் - அதாவது சராசரி நூறுபேருக்கு ஒரு துணைத்தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். நாலு துணைத் தலைவர்களுக்கும் தலைவர் ஒருவர் தேர்ந்தெடுக் கப்பட்டார். நானூறு பேரும் வசதியாகக் குளிப்பதற்கும், குடிப்பதற்குமான தண்ணீரைப்பெற ஜல ஸ்தாபன மந்திரி" ஒருவர் நியமிக்கப்பட்டார். உணவு மந்திரி ஒரு வர். கடிதப் போக்குவரத்து உள்நாட்டு விவகாரங்களைக் கவனித்து ஜெயில் அதிகாரிகளிடம் தொடர்பு வைத்துக் கொள்ள ஒரு உள்நாட்டிலாகா மந்திரியும் உண்டு. மருத் துவ மனைக்கு அழைத்துச்செல்லுதல், தனி உணவுகளை நோயுள்ளவர்களுக்குப் பெற்றுத் தருதல் போன்றவை களுக்கு சுகாதார மந்திரி யொருவர், மக்கள் மன்றம் அமைத்தல் - கூட்டுதல் - கலைத்தல் - தலைமை நிலையத்தி லிருந்து - இல்லை - ஆட்சி பீடத்திலிருந்து வெளியாகும் அறிக்கைகளை உடனுக்குடன் அறிவித்தல் - முதல்வர் எனப்படும் தலைவருக்கு ராஜ்ய நிலைமையை எடுத்துரைத் தல் - ஆகிய காரியங்களுக்காக ஒரு பிரதம செயலாளர் உண்டு.