________________
134 கருணாநிதி மேற்கண்டவாறு இலாக்காக்கள் பிரிக்கப்பட்டு எல் ரும் பதவியேற்றனர். இதில் மூன்றாம் பிளாக் தலைவ ராக தோழர் மணி நான்கு நாட்கள் பணியாற்றி - பிறகு வழக்கு சம்பந்தமாக நாகை சென்றுவிட்டார். லாகா சம்பந்தப்பட்டவர்கள் விபரம் :- தலைவர் :- - கருணாநிதி இவர் திராவிடமுன்னேற்றக் கழகத்துப் பிரசாரகர். இந்த நூலின் ஆசிரியர். வயது ஏறத்தாழ முப்பது. தொண்டனாக இருந்தே தொண்டு செய்வதில் விருப்பமுள்ளவர். இதிலிருந்தே கொஞ்சம் தற்புகழ்ச்சிக்காரர் என்பதும் உள்ளங்கனி -நெல்லிக்கை போல் விளங்கும் ! துணைத் தலைவர் :- நரராயணசாமி மன்னார்குடியைச் சேர்ந்தவர். இவரைப்பற்றி முன்பே குறிப்பிடப் பட்டுள்ளது. இரும்பு உடலும் - இளகும் நெஞ்சும் பெற்றவர். முதல் பிளாக் தலைவர் :- அடைக்கலம் · பட்டுக்கோட்டை வட்டாரத்தில் நமக்கோர் படைக்கலம். பேராவூரணி குழந்தையென்று ஒரு பெரிய ஆள் இருக்கிறார். அவருடைய பாசறையிலே தயாரான வாட்களில் ஒன்றுதான் அடைக்கலம். பழங் காலத் திராவிட மக்களின் வீரத்தையும் வேகத்தை காணவேண்டுமானால் பேராவூரணி செல்லலாம். அங்குள்ள திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்கள் செய்துகாட்டும் உடற்பயிற்சி சிலம்பக் கலைகளைக் செயலாற்றும் சிங்கம் அடைக்கலத்தின் யும் காணலாம்.