பக்கம்:ஆறுமாதக் கடுங்காவல்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

136 உள்நாட்டு இலாகா: கருணாநிதி முல்லை சத்தி - முல்லைக்கொம்பை வடிவேலு அவர் களின் இளவல். கொடுத்த பொறுப்பை செவ்வனே செய்பவர். கொஞ்சம் முன்கோபக்காரரே தவிர தோழ மைக்கோர் பிசிராந்தை. ஜலஸ்தாபன மந்திரி :- அய்வநல்லூர் வேலு. நாகை வட்டாரத்தில் நல்ல தொரு தொண்டர். அடக்கமான நட டத்தை. கொள்கை யிலே அடக்கொணா ஆர்வம். மெலிந்த உடல். மென்மை யான மனம் இயக்க நலனுக்கு செலவிடப்படும் இளமை. பிரதம செயலாளர் :- ஜெயங்கொண்டம் வேணு. அலுப்பில்லாமல் உழைக் கும் வைரக் கட்டை. ஒவ்வொரு மூச்சும், பேச்சும், கழகம் - கழகம் என்றே ஒலிக்கும். பம்பரம்போல் பணி புரியும் காளை.போட்டோஸ்டுடியோவைத்து வாழ்க் கையை நடத்திக்கொண்டு கட்சிப் பணியை வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டவர். எந்த வேலையும் - சொந்த வேலையென எண்ணும் சோர்விலாளன். சுயமரியாதை இளஞ்சுடர். இத்தகைய அருமைமிகு செயற்குழு, சிறைச்சாலை ராஜ்யத்திலே பதவியேற்றுப் பணிபுரியத் தொடங்கி விட்டது. உணவு பரிமாறுதல் - தேவைகளைக் கேட்டல்- சிகிச் சைக்கு அனுப்புதல் - முதலிய எல்லாக் காரியங்களையும் சிறைச்சாலை வார்டர்கள் கவனித்து வந்தார்கள். எங்கள்