________________
ஆறுமாதக் கடுங்காவல் 139 பத்துமணி சுமாருக்கு "சுதேசமித்திரன் 'ஏடு வரும். அந்தப் பத்திரிகையிலே ஏற்கனவே இருக்கிற இருட் ட்டிப்பு போதாதென்று - இங்கே வேறு முக்யமான செய்தி களிலே தாரைப்பூசி அனுப்புவார்கள். அண்ணா சிறைப் பட்டார் என்ற செய்தியை 'மித்திரன்' மூலமாகப் பார்த்து எல்லோரும் 'உண்ணா விரதம்' இருந்தோமாம்! அதற் காக எந்த ஊரிலே - எந்த நாட்டிலே - யார் சிறைப்பட் டாலும் அந்தச் செய்திக்கு தார் பூசிவிடுவார்கள். G நான்கூட விளையாட்டாகக் கேட்டேன்; கா 'இப்படி தேவையற்றவைகளுக்குக் கூட தார் பூசு கிறீர்களே; கோதாவரியில் வெள்ளம் என்று செய்தி வந்தால் உடனே நாங்கள் அதைப் பார்த்து ஆக கோதாவரியில் வெள்ளமா? அனுதாப உண்ணாவிரதம் இருப்போம்" என்று கூறினால் - பிறகு வெள்ளத்தைப் பற்றிய செய்திக ளு க் கு ம தார் பூசுவீர்களா? என்று! பதில் கிடைக்கவில்லை - அதற்கு! - ஒரு வகையில் எமக்கு மகிழ்ச்சி! இருட்டடிப்பு செய்யும் பத்திரிகைகளின் முகத்தில் தார் பூசவேண்டுமென்று பல நாளாக ஆசைப்படுகிறோம். அந்த அரியவேலையை - அரசாங்கத்தாரே தம் சொந்தப் பொறுப்பில் செய்து கொள்வதற்காக நன்றி தெரிவிக்கத்தான் வேண்டும். 66 வந்த பத்திரிகையை எடுத்துக்கொண்டு பிரதம செயலாளர் வேணு ஓடுவார். நான்கு பிளாக்குகளுக்கும் பத்திரிகை சென்று அதைப் பத்திரமாக எடுத்து வரும் வேலையை அவர் துரிதமாகக் கவனிப்பார்.