பக்கம்:ஆறுமாதக் கடுங்காவல்.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

142 கருணாநிதி சிறிது அளவில் பெரிதாய்விடும். மோர் வராது. கடலை உருண்டை வரும். குழம்பு உண்டு. சாப்பாடு முடியும். ஆறுமணிக்கெல்லாம் மூ ன் று மூன்று பேராக கூண்டுகளில் அடைக்கப்படுவார்கள். நாங்கள் ‘ பி’ வகுப்புக்காரர்கள் தனித்தனி ஒவ்வொருவராகத்தான் அடைக்கப்படுவோம். பாட சில கூண்டுகளிலேயுள்ள ஆண்குயில்கள் ஆரம்பிக்கும்! அந்த மகுடித் தொனிகேட்டு பாம்புகள் வந்துவிடும் - பாம்புகளுக்குவேறு 'டூட்டி' இருந்தால் தேள்களையாவது அனுப்பிவைக்கும். அந்தத் தேள்கள் நமது தோழர்கள் பலரை முத்த மிட்டுமிருக்கின்றன. இரவு பத்து மணிக்கு அனேகமாக எமது ராஜ்யம் அடங்கிவிடும். கணக்கு வருது! ஆறு மணிக்கு தோழர்கள் அடைக்கப்பட்டதும் கைதிகளின் எண்ணிக்கை சரியாக இருக்கிறதா என்று பார்க்க 'ஹெட்வார்டர்' எல்லா பிளாக்கிற்கும் சென்று சுற்றிப்பார்த்து வருவார். கடைசியாக எங்கள் நாலாம் பிளாக்கிற்கு வருவார்.உம் - கணக்குவந்துவிட்டது. என்போம் நாங்கள்! கெடிகாரம் போவுது! சிறைச்சாலை முழுதும் பல இடங்களிலே சுவர்களில் ஒரு வகையான சாவி பொருத்தப்பட்டு அந்த இடங் களுக்கு ஒரு மணிக்கு ஒருதரம் வார்டர் சென்று - தன்னிட்