________________
ஆறுமாதக் கடுங்காவல் 143 முள்ள கெடிகாரத்திற்கு அந்த சாவி போட்டுவிட்டு வர வேண்டும். அந்த வார்டர் எங்கும் நிற்கமுடியாது. சுற்றியபடியே காவல் காக்கவேண்டும். நின்றால் - அவரிட முள்ள கடிகாரம் காட்டிக் கொடுத்துவிடும். அவர் இரவு நேரத்தில் கையில் ஒரு விளக்குடன் போய்க் கொண்டிருப்பது எங்களுக்குத் தெரியும். அவரைப் பார்த்து நாங்கள் மணி தெரிந்துகொள்வோம். அதற்கா கத்தானோ என்னமோ - சிறையில் அவர்போனால் - "கடி காரம் போவுது" என்கிறார்கள்! - நாங்களும் கணக்கு வருது! கெடிகாரம் போவுது" என்றுதான் சொல்லு வோம். 66 - 66 இப்படி எங்கள் ராஜ்யம் நடந்துகொண்டிருக்கும் போதுதான் சென்னையில் ஆச்சாரியார் வீட்டு முன் மறியல் அறப்போரில் தலைமை வகித்த தோழர்களான - போர்பலகண்ட புலிநிகர் நண்பர் முனிசாமி, வீரமிகு மறவர் வி.டி.அண்ணாமலை, ஈரோடு தந்த இளஞ்சிங்கம் எஸ். அப்பாவு, காஞ்சிச் செல்வர் களம் பல கண்டு நம் உளமெலாம் நிறைந்த கர்மவீரர் C. V. M. அண்ணாமலை, செயலாற்றும் சீயம் சென்னை A. K. சாமி, வடாற்காடு மாவட்ட செயலாளர் வன்னெஞ்சர் இடுப்பொடிக்கும் வாய்மையாளர் A.L.C. கிருஷ்ணசாமி, சமருக்கஞ்சா சம்மந்தம்,இன்மொழிபேசும் இன்மொழியன், செருமுனைக் கோர் சிறப்புறு படையாம் செயசந்திரன், நாசம் எதிர்க் கும் நடராசன், அயர்விலாத் தொண்டர் அரசு ஆகி யோரும் முன்னூறுக்கு மேற்பட்ட தோழர்களும் கைது செய்யப்பட்டார்கள். பொதுச்செயலாளர் அ ண் (500) நெடுஞ்செழியன், சம்பத், மதி, நடராசன் ஆகிய ஐவரும் நிபந்தனையின்றி சொந்த ஜாமீனில் விடுதலை செய்யப் பட்டு அவர்கள் மீது வழக்கும் தொடரப்பட்டது.