பக்கம்:ஆறுமாதக் கடுங்காவல்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

146 கருணாநிதி செப்டம்பர் திங்கள் முதல் நாளிலேதான் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது. தூண்டி விட்டார்களாம் ஐவரும் ! ஆகவே கூண்டி லிடப்பட்டார்கள். எது? தூண்டிவிட்டது யார் ? கேள்விக்கு சரியான பதில் மக்கள் மன்றம் சுட்டிக் காட்டுகிறது தூண்டி விட்டவர்கள் யார் என்று! ஆனால் அவர்கள் வெளியிலே லவுகிறார்கள் !! の கிளர்ச்சியைத் தூண்டிவிட்டது திராவிட முன் னேற்றக் கழகம். சரி- ஒத்துக்கொள்வோம் ! கிளர்ச்சி செய்யும்படி கழகத்தைத் தூண்டிவிட்டது யார்? 'நான்சென்ஸ் ' என்று கூறி தமிழர் துடிப்பைத் துண்டிவிட்டது யார் ? கல்லக்குடி என்ற பெயரை அழித்து தமிழரின் எதிர்ப்பைத் தூண்டிவிட்டது யார்? புதிய கல்வித் திட்டத்தைக்கொண்டு வந்து நா கும் புகைச்சலைத் தூண்டிவிட்டது யார் ? காடெங் தொழிலாளர்களுக்குச் சொந்தமான ஒரு பெரும் ஆலை இருக்கிறது. அதிலே சர்க்கரை மூட்டைகள் அடுக் கப்பட்டிருக்கின்றன. அது கண்டு ஒரு சிலருக்கு வயிற் றெரிச்சல். அந்த ஆலைக்குத் தீ வைக் வக்கும்படி சில ஆட் களை அனுப்புகிறார்கள். தீ வைக்கப்படுகிறது. ஆலை எரிகிறது! அதுகண்ட பொதுநல ஊழியர்கள் புறப்படு