பக்கம்:ஆறுமாதக் கடுங்காவல்.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆறுமாதக் கடுங்காவல் 149 இப்படி சுற்றியுள்ள நாடுகளிலே சூறாவளி அடிக் கிறது. காண்கிறோம் நாம்! ஆனால் இங்கு சூதர்கள் சிலர் அந்த சூட்சமத்தை உணராமல் இந்த சாம்ராஜ்ய அதி காரம் சதமென எண்ணியிருக்கிறார்கள்! நல்ல மரங்களிலேயே புல்லுருவி பாயும்போது- இந்தக் கள்ளிக்காடுகளா இருந்து வாழப் போகின்றன? அந்த நம்பிக்கை நிறைந்த ஆறுதலோடுதா ன் அண்ணாவும் ஐயாயிரவரும் சிறைப்பட்டுள்ள கொடுமை யை ஒருவாறு சமாளித்துக்கொண்டோம் - சிறையிலிருந்த படியே! இனி எமது ராஜ்யத்தின் நிலைமைகளைப் பற்றிக் கொஞ்சம் கவனிப்போம். சிறைச்சாலை ஒரு கிராமம் போலவே எல்லா வசதி களும் உடையது என்று குறிப்பிட்டிருந்தேனல்லவா? உண்டு என்றெல் சலவை சாலை உண்டு - தொழிற்சாலை பள்ளிக்கூடம் உண்டு - தோட்டங்கள் உண்டு - எ லாம் படித்தீர்களல்லவா? அவைகளைப்பற்றி முதலில் சிறிது விளக்குகிறேன். சலவைசாலை இருக்கிறது என்பது உண்மைதான். சலவைசாலை யென்றதும், எல்லாக் கைதிகளும் தங்கள் உடைகளைப் போட்டு அடிக்கடி சலவை செய்து கொள்ளலாம் என்றுதானே நினைக்கிறீர்கள் - அதுதான் தப்பு!