பக்கம்:ஆறுமாதக் கடுங்காவல்.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆறுமாதக் கடுங்காவல் 151 கோவையில் உள்ள சிறையில் பெட்ஷீட்டுகளும், வார்டர் - போலீஸ் முதலியவர்களுக்கு உடுப்புத் துணி களும் தயார் செய்யப்பட்டு, எல்லா சிறைச்சாலைகளுக்கும், மீதி அரசாங்க அலுவலாளர்களுக்கும் உபயோகமாகிறது. வேலூரில் தயாரிக்கப்படும் செருப்புகளும், பூட்ஸ்களும், அரசாங்க அலுவலாளர்களுக்கும் - எல்லா சிறைச்சாலை கட்கும் உபயோகமாகின்றன. ராஜ்முந்திரி சிறைச்சாலை யில் நல்ல கம்பளிதள் தயாரிக்கப்படுகின்றன. இப்படி முக்ய தொழில்களும் - சில்லரைத் தொழில் களும் - சிறைக் கைதிகளாலேயே செய்யப்படுகின்றன. சர்க்கார் அலுவலகங்களில் இருக்கின்ற மரச்சாமான்கள் பல கைதிகள் சிறைகளில் தயாரித்தவை தான்! சென்னை சிறையில் அச்சகம் அமைக்கப்பட்டு எல்லா சிறைகளுக்கும் தேவையான அச்சு வசதிகள் கவனிக்கப்படுகின்றன. தண்டனை பெற்றுவந்துள்ள கைதிகள் உழைக் காமல் இருக்கவே முடியாது. தோட்டி வேலைகளையும் அவர்களில் சிலரே செய்யவேண்டும். 'கூட்டு கேங்' என்று ஒரு குழு கைதிகள் நிறைந்ததாயிருக்கும். அவர்கள் சிறைச்சாலை முழுவதையும் சுத்தப்படுத்திக்கொண்டே யிருக்கவேண்டும். குப்பையில்லாவிட்டாலும் கூட்டவேண்டும். அதற்குத்தான் 'ஜெயில் வேலை' என்று பெயர். பாதைகளில் முளைத்திருக்கும் புற்களையெல்லாம் பிடுங்கும்படி உத்திரவிடுவார்கள். மண்வெட்டி கொண்டு