பக்கம்:ஆறுமாதக் கடுங்காவல்.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆறுமாதக் கடுங்காவல் 153 தண்டனை அணிந்து கொள்ளவேண்டும். பெற்றவர்களாதலால் -நாங்களும் குல்லா காலையில் எழுந்ததும் நாலு நாலுபேராய் Fileல் உட் காரவேண்டும். சாப்பிடப்போனாலும் - குளிக்கப் போனாலும் வேலை செய்யப்போனாலும் காலை முதல் 1 மாலை வரையில் பல தடவை Fileல் உட்கார்ந்தபிறகுதான் போகவேண்டும். அப்படி Fileல் உட்காரத் தவறுவது பெருங்குற்றம்.ஏன்; தப்பித்து ஓடுவதற்கு எத்தனித்த குற்றமாகக்கூட ஆகிவிடலாம்! அதற்கெல்லாம் பெருந் தண்டனைகள் கிடைக்கும். தினந்தோறும் குளிப்பதற்கு அனுமதியுண்டு. ஆனால் அவர்களுக்குத் தரப்பட்ட の உடைகளை வாரம் ஒருமுறைதான் அவர்கள் துவைத்து டுத்துகிறார்கள். அது அவர்களின் சோம்பேறித் தனமோ- அல்லது சிறையின் உத்திரவு அப்படியோ தெரியவில்லை! சிறை அதிகாரிகள் நல்லவர்கள்-ஆகவே சிறை உத்திரவாயிருக்கமுடியாது!- மாதா மாதம் ஒரு முறை எண்ணெய் தேய்த்து முழுகலாம் - அதற்கு அளவு எண்ணெய் கொடுக்கிறார்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை உண்டு. அன்றைய தினம் வேலை கிடையாது. அதற்காக இஷ்டம்போல் சுற்றவும் முடியாது. கள் இருப்பிடத்தில் இருக்கவேண்டியதுதான். அவரவர் நான், முதலில் சிறைச்சாலை - ஒரு கிறாமம்போலிருக் கிறது என்று சொன்னதும், "பூ-இவ்வளவு தானா?" என்று நினைத்தவர்களுக்கெல்லாம் இப்போது கொஞ்சம் நடுக்கம் ஏற்படுகிறதல்லவா? ஆனால் இத்தகைய சிறைச்சாலையைத் தங்கள் ஜீவிய பூமியாக்கிக் கொண்டிருப்பவர்களும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.