________________
சீப் வார்டர்: ஆறுமாதக் கடுங்காவல் ⚫ 157 எல்லா வார்டர்களுக்கும், தலைமை வார்டர்களுக்கும் இவர் அதிகாரி. திருச்சி சிறையில் 'டவர்' என்று ஒரு இடமிருக்கிறது. அதுதான் சிறைச்சாலைக்கு இருதயம் போல! அங்கேதான் சீப் வார்டர் இருந்து மாற்றுவார். ஹெட் வார்டர்: காரிய ஐந்தாறு பெரும் பிளாக்குகளாகப் பிரிக்கப்பட்டிருக் கும் சிறைச்சாலையில் பல ஹெட்வார்டர்கள் இருக்கிறார் கள். ஒவ்வொரு பெரும் பிளாக்கின் முழுப் பொறுப்பும் இவர்களிடமே யிருக்கிறது. வார்டர் : நீலத் தொப்பியும், காக்கி சட்டையும் அணிந்திருப் பார்கள். ஹெட்வார்டர்களுக்கு அதேமாதிரி தொப்பியில் இரு ஜரிகைக் கோடுகள் உண்டு. இவர்களுக்கு மாதம் அலவன்ஸ் உட்பட சம்பளம் ஐம்பது ரூபாய்க்குள் தான் கிடைக்கிறது. குடும்பத்தை சரிவர நடத்த முடியாத நிலைமையிலே கஷ்டப்படுகிறார்கள். போதுமான சம்பளம் கிடைத்து - பூரிப்பான வாழ்வு நடத்த அவர்களால் முடியு மானால் இன்னும் உற்சாகத்துடன் கடமை செய்வார்கள். ஹட் வார்டர் -வார்டர்களின் சம்பளத்தை அதிகமாக்க வேண்டுமென்று-காங்கிரசார் சிறையிலிருந்தபோது சொன்னார்கள். ஆட்சிக்கு வந்தபிறகு எத்தனையோ மறந்தார்கள் - அவைகளில் இதுவும் ஒன்று! சராசரி மனிதன், தன் தேவை பூர்த்தி செய்யப்படும்போது தவறு செய்யமாட்டான் என்பதை இந்த ஆட்சியாளர் உணந்திருந்தால் கைதிகளின் தொகை இவ்வளவு பெருகி யிருக்கமுடியாது என்பதை முன்பே குறிப்பிட்டிருக் கிறேன்.