பக்கம்:ஆறுமாதக் கடுங்காவல்.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

158 கருணாநிதி காணிக்கை வார்டர்: சிறையில் வார்டர்களுக்கு அடுத்தபடியாக பதவி வகிப்பவர்கள் காணிக்கை வார்டர்கள் தான். இவர்களுக்கு. சம்பளம் கிடையாது. வெள்ளை உடையும் வெள்ளைத் தொப்பியும் உண்டு. வார்டர்கள், வேலை முடிந்ததும் வெளியிலே செல்வதுபோல் இவர்கள் செல்ல முடியாது. காரணம் இவர்களுக்கு வேலை முடிவதேஇல்லை. காணிக்கை வார்டர் என்பது உங்களுக்குப் புதிராக தல்லவா? இருக்கிற கான்விக்ட் வார்டர் (Convict Warder) என்பதுதான் இப்படித் திரிந்து, தேய்ந்து, தெளிந்து - காணிக்கை வார் L ராகியிருக்கிறது. மூன்று நான்கு வருடங்களுக்குமேல் தண்டனை பெற்ற கைதிகள் தங்களின் நன்னடத்தையால் சிறைச்சாலையில் பெறுகிற உத்தியோகமிது! நீண்டநாள் தண்டனைபெற்ற ஒரு கைதி - மெள்ள மெள்ள ஒரு மேற்பார்வையாளனாக பதவி பெறமுடியும். 'ஓவர் சீயர்' என்று அந்த உத்தியோகத்துக்குப் பெயர். வெள்ளைத் தொப்பியும் - கால் சட்டையும் அரைக்கை சட்டையும் அவனது உடுப்பு! அவனது பார்வையிலே பல கைதிகள் கண்காணிக்கப்படுவார்கள். க " - சிறுகச் சிறுக ஓவர்சியருக்குப் பதவி உயர்ந்து, அழகான வெள்ளைத் தொப்பியும் - வெள்ளைக் கோட்டும், நீண்ட வெள்ளைக் காலுறையும் தரப்பட்டு "கான்விக்ட் ’ வார்டராக மாறிவிடுவார்கள். 'ஓவர்சியர் இரவு நேரத் திலே கூண்டிலே அடைபடவேண்டும். 'கான்விக்ட் வார் டர்' - அதாவது கைதி வார்டர் கூண்டிலே அடைபடத் தேவையில்லை. ஆனால் இரவு நேரங்களில் மாறி மாறி குறிக்கப்பட்ட கால அட்டவணைப்படி - பிளாக்குகளில் மதிற் சுவருக்குப் பக்கங்களில் - காவல் புரியவேண்டும்.