பக்கம்:ஆறுமாதக் கடுங்காவல்.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திருச்சி ஆறுமாதக் கடுங்காவல் சிறையிலுள்ள கான்விக்ட் 159 வார்டர்கள் பெரும்பாலும் ஆயுள் தண்டனை பெற்றவர்கள்தான். ஆயுள் தண்டனை என்பது இருபது ஆண்டு! - ஆனால் -அவர்கள் நடந்து கொள்ளும் முறை திருந்திய நடவடிக் உக்கை அயராத உழைப்பு - இவை களின் காரணமாக அவர்களுக்கு 'நாட் கழிவு ' தரப்பட்டு இருபதாண்டுகட் குள்ளாகவே விடுதலையாகிவிடும் வாய்ப்பு இருக்கிறது. ஆயுள் தண்டனை பெற்றவர்களும் பெரும்பாலும் தூக்குமேடையிலிருந்து திரும்பியவர்கள் தான்! தூக்கு மேடைக்கு செல்லும் கைதிகளுக்காக ஒரு தனி இடம் இருக்கிறது. அதற்குப் பெயர் 'கண்டம்' என்கிறார்கள். அதுவும் திரிந்து தெளிந்த பெயர்தான்! Condemned Prison என்பதுதான் கண்டம் என்று மாறியிருக்கிறது. அங்கு வந்த மனிதனுக்கு ஒரு கண்டம் இருக்கிறது என்பதை அது குறிப்பதால் திரிந்த பெயரும் ஒருவாறு பொருந்தும்! அந்தக் கண்டத்தில் தான் ஒரு காலத்தில் அண்ணாவும், பெரியாரும் பத்து நாட்கள் அடைக்கப் பட்டிருந்தார்கள். கண்டத்திலேயிருக்கும் கைதிகள் தனித்தனியே தான் வைக்கப்படுவார்கள். ஒவ்வொரு ஆளுக்கும் ஒரு காவல் உண்டு. அதற்குப் பக்கத்தி லேயே சிறிது தூரத்தில் தூக்குமேடையுமிருக்கிறது. நாங்கள் சென்றபிறகு-எட்டு குற்றவாளிகள் அந்த மேடை மூலம் உலக விடுதலை பெற்றிருக்கிறார்கள். மிகவு ம் சோகமான செய்தியொன்று ! ஒரு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை கிடைத்திருந்தது. அவன் அதையும் மறுத்து அப்பீல் செய்தான். அப்பீலில் அவனுக்குத் தூக்குத் தண்டனை கிடைத்து விட்டது. அவன் நிலைமை எப்படி