பக்கம்:ஆறுமாதக் கடுங்காவல்.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆறுமாதக் கடுங்காவல் 161 ஆனால் ஆயுள் தண்டனை பெற்ற கைதிகள், வெளியில் வந்தபிறகு புதிய மனிதர்களாக மா, றி - கொலைவெறியைத் தடுக்கும் கொள்கைக்காகப் பாடுபட்டார்களேயானால்- ஒரு கொலையால் வந்த பழியை - பல உயிர்களைக் பா காப் ற்றுவதின் மூலம் போக்கிக்கொள்ளலாம். அதைவிட்டு வெளியில் வந்ததும் - "என்னிடம் யாரும் வாலாட்டக் கூடாது-நான் கொலைக்கேசில் ஜெயிலுக்குப் போன வனாக்கும் " என்று மீசையை முறுக்கித் தோளைத் தட்டிக் கொண்டு நின்றால் அது வீரமுமாகாது -விவேகமு மாகாது! கோழைத்தனத்தின் கூக்குரலாகவே கருதப்படும். 1 - எதைப்பற்றியோ பேசவந்த நாம் எங்கேயோ உபதேச காண்டத்திற்குப் போய்விட்டதுபோல் தெரி கிறது. திரும்ப நம்மிடத்திற்கே வருவோம். இப்போது சிறைச்சாலையில் உள்ள அலுவலாளர்களைப்பற்றி ஒரு வாறு புரிந்துகொண்டோம். கொலைக்குற்றத்தால் தண்டனை பெற்றவர்கள் நி லையையும் அறிந்துகொண் டோம். கொள்ளைக் குற்றம் கள்ளக் கையெழுத்து பிக் பாக்கெட் அரசாங்க மோசடி இவைகளில் ஈடு பட்டவர்களும் இருக்கிறார்கள். இப்போது திருச்சி சிறை யில் உள்ள கைதிகளில் மிகப் பெரும்பாலோர் பாதிக்கு மேற்பட்ட தொகையினர்- மொத்தம் மூவாயிரம் கைதிகள் என்பதைக் குறைக்காமல் போக்கு வரத்துக் கைதிகளாக இருப்பவர்கள் சாராய வழக்கில் ஈடுபட்டவர்கள் தான். இன்று நூறு சாராய வழக்கு கைதிகள் விடுதலையானால்- நாளைக்கு நூற்றிஐம்பது சாராய வழக்கு கைதிகள் உள்ளே நுழைகிறார்கள். காங்கிரஸ்சர்க்கா ரி 'மதுலிலக்கு' நாற்றமடிக்கும் காட்சி சிறைச்சாலையைப் பார்க்கும்போதுதான் பட்டவர்த்தனமாகத் தெரிகிறது. ள