பக்கம்:ஆறுமாதக் கடுங்காவல்.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆறுமாதக் கடுங்காவல் 163 அடடா! மறுபடியும் எங்கேயோ - போய்விட்டோமே! எதையெடுத்து விவரித்தாலும் இறுதியில் அரசாங்கத் திடம் தான் போய் நிற்கிறது என்செய்வது! நாட்டின் நன்மை தீமைகளுக்கு அரசோச்சுகிறவர்கள் தானே பொறுப்பாளிகள். ஆகவே நாம் அந்த இடத்திற்குப் போய்விடுவதில் ஆச்சரியமில்லை. சரி, மீண்டும் சிறைச்சாலைக்கே வருவோம். சிறையில் நுழையும் கைதிகளுக்கு சிறையின் சட்ட திட்டங்கள் வசதீகள்பற்றி - வெளியிலேயுள்ள ‘குவாரண்டைனில்' குறிப்பிட்டிருக்கிறார்கள் என்று முன்பு சொன்னேன். இதை நீங்கள் படித்துக்கொண்டால் சிறைச்சாலையைப் பற்றிய முழு விபரங்களை கூடியவரையில் பெற்றுவிடு வீர்கள். பிறகு நமது கதையைத் தொடங்குவோம். இதோ- படியுங்கள்! நான் மொழி பெயர்த்து - ராஜன் சுவற்றில் தீட்டியது இதுதான்! நினைவுக்கு! நாட்கள் 'குவாரண்டைன் > இதுதான். இங்கு நீங்கள் பத்து வைக்கப்படுவீர்கள். இங்கே நீங்களும் உங்கள் சகோதரக் கைதிகளும், வியாதியிலிருந்து பாதுகாக்கப் படுவீர்கள். டாக்டர்கள் கடமை புரிய ஒத்துழையுங்கள். அவர்கள் நோய் நீக்கப் பாடுபடுகிறவர்கள். கவனிக்க! எந்த வேலையை விரும்புகிறாய்? தச்சுவேலையா? தறிவேலையா? தையற் தொழிலா? புத்தகம் தைப்பதா? பயிர்த் தொழிலா? பாய் பின்னுவதா? தேவையானதைத் தேர்ந்தெடு. வெளியிலே நீ செய்த வேலையையும் - இங்கே விரும்பும் வேலையையும் சிறையதிகாரியிடம் கூறு. அவர் உனக்கு நல்ல வேலை வழங்குவார். க