________________
நாட்குறைப்பு : ஆறுமாதக் கடுங்காவல் 165 நாட் குறைப்பு என்பது உன் தண்டனை காலத்தைக் குறைப்பதெனப் பொருள். மூன்று மாதமும் அதற்கு மேலும் கடுங்காவல் தண்டனை பெற்றவர்களுக்கு நன்னடைத்தைக்காக இரண்டு நாட்களும், நல்ல ஊ ழியத் திற்காக இரண்டு நாட்களும், ஆக மாதம் நான்கு நாட்கள் குறைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. அதுவுமன்றி தொடர்ந்து பனிரெண்டு மாதங்கள் எவ்வித குற்றமும் புரியாதிருப்பின் தண்டனையில் பதினைந்து நாட்கள் குறையும். அதற்காக முயற்சித்து அதிகப்படியான பயன்பெறுக. பயனுள்ள பணிபுரிவோருக்குமுப்பது நாட்கள் - நாட்குறைப்பு கி டைகக வசதியுண்டு. உத்தியோக உயர்வு : கைதிகள் பலவாறு பிரிக்கப்படுகிறார்கள். கட்கும் உத்தியோக உயர்வு உண்டு. அவர் நாட் அறுபது நாள் நாட்கழிவு பெற்ற நல்ல ஊ ழியரும், சிறந்த பண்புடையவரும் இரவு காவலராகவோ- (வாட்ச்மேன் ) ஊழியரை மேற்பார்வை யிடுபவராகவோ உயர்த்தப்படுவார்கள். இரவு காவலனுக்கு மாதத்தில் ஐந்து நாட்களும், மேற்பார்வையாளனுக்கு ஆறு களும் தண்டனை காலத்தில் விடுமுறையாகக் குறைக்கப் படுகிறது. இந்த இரண்டு பிரிவிலும் ஆறுமாதகாலம் அலுவல் பார்த்தவருக்கு, கைதி வார்டர் (கான்விக்ட் வார்டர்) என்ற உயர்ந்த உத்தியோக உயர்வு உண்டு. அவர்கட்கு மாதத்தில் எட்டு நாட்கள், "நாட் கழிவு தரப்படும். ஆனால் நல்லவன், நம்பிக்கையானவன், நாணயமுள்ளவன், என்பதை நிரூபிக்க வேண்டும். இதைப் பெறும் வாய்ப்பை நீங்கள் விரும்பத்தான் செய்வீர்கள். உ