பக்கம்:ஆறுமாதக் கடுங்காவல்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

14 கருணாநி, டது. திருச்சியிலே மத்திய சிறைச்சாலை யிருக்குமிடத்திற்கு அருகாமையிலே தான் விமான நிலையமும் இருக்கிறது. போராட்டத்திலே ஒருவேளை கைது செய்யப்பட்டால், நாம் வரவேண்டிய இடம் அருகிலே தானிருக்கிறது என்று பேசிக்கொண்டே யிறங்கினோம். இருவர் எங்களை இன்முகங் எதிர்கொண்டழைத்தனர். திர விடப் பண்ணை முத்துகிருஷ்ணன், திருச்சி செயலாளர் மணி - இருவரும் ! அந்த இருவரையும் உங்களுக்கு அறிமுகப்படுத்தவேண் டியது இன்றியமையாதது. காட்டி உ இந்த எழுத்துக் குவியலில் இடம்பெறும் அத்தனை தோழர்களையும் பற்றி விவரிப்பதென்றால் ஏடு கொள் ளாது. ஆயினும் அது தேவையான பயன்படத்தக்க ஒரு முயற்சியென்று கருதி - ஆங்காங்கே அவர்களின் பெயர்கள் குறிப்பிடப் படும்போது அவர்களின் தூய தொண்டு பற்றிய பெருமை மிகு புகழ்க் கவிதைகளின் முதல் அடியையாவது தொட்டுவிட்டுப்போக விரும்பு கிறேன். குட்டையான உருவமும் - குறுஞ்சிரிப்பால் மற்றவ ரைக் கவரும் தன்மையும் - கண்டிப்பாக எதையும் பேசிடும் நாவும் - எதிரி கொஞ்சம் சிரித்துப் பேசினால் இளகிவிடும் உள்ளமும் கொண்டவர் திராவிடப் பண்ணை முத்துகிருஷ் ணன். திராவிடன் எப்படி ஏமாந்தான் என்பதற்கு ஆதா ரம் வேண்டுமானால் அவரைக் காட்டிவிடலாம்; அவ்வளவு இளகிய மனம் படைத்தவர். அழகான முறையில் புத்த கங்களை வெளியிட அக்கிரகாரத்தினருக்குத்தான் தெரியும் என்ற நிலைமையைத் தனது பண்ணை மூலம் சுக்கல் சுக்க லாக உடைத்தெறிந்தவர். அண்ணாவின் எழிற் காவியங் களுக்கு மெருகூட்டித் தந்தவர், பதிப்பக வாயிலாக! அத்