________________
66 ஆறுமாதக் கடுங்காவல் பேச்சு மன்றம் 167 பேச்சு மன்றம் ஒன்று உங்கள் ராஜ்ஜியத்திலே ஆரம்பித்தீர்களே; அது என்னவாயிற்று? என்று கேட்க நீங்கள் துடிக்கிறீர்கள். அது பல பேச்சாளர்களைத் தயாரித்தது. பெரிய மேடைப்பிரசங்கிகள் ஆகாவிட்டா லுங்கூட தங்கள் தங்கள் ஊர்களில் கொள்கையைத் தெளிவாகச் சொல்லும் பிரச்சாரகர்கள் உற்பத்தி செய்யப்பட்டார்கள். மாவட்டத்திலே பயிற்சி முகாம் ’ அமைப்பது என்றால் குறைந்தது ஆயிரம் ரூபாயாவது செலவாகும். அதுவும் ஒரு வாரம் நடத்த முடியும். இப்போது அரசாங்க செலவிலேயே இரண்டு மாதகாலம் பயிற்சி முகாம் நடத்திடக் கூடிய நல் வாய்ப்பை இழக்க முடியுமா என்ன? 46 கடவுள் உண்டா? இல்லையா? என்பது பற்றி முதல்நாள் பல நண்பர்கள் தங்கள் கருத்துகளை எடுத்துரைத்தார் கள். உண்டு என்று சிலரும், இல்லை என்று சிலரும் வாதிட் டார்கள். இல்லையெனும் எண்ணமுடையவர்களே - என்னும் வாதத்தை சிறப்பாக நடத்தினார்கள். உண் கூட - " ஒரு கடவுள் உண்டு என்ற கொள்கையை திராவிட முன்னேற்றக் கழகம் மறுத்துரைக்கவில்லை என்றாலுங் விவாதத்தை, கடவுள்பற்றிய ஆராய்ச்சியை நிகழ்த்துவதிலே அதற்குத் தடையொன்றுங் கிடையாது. கடவுள் பெயரால் சீரழிக்கப்படும் பொருளாதார நிலை பற்றியும் - அதைத் தடுப்பதற்கான வகை பற்றியும் தீர யோசித்து முடிவு காணுகிற இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம் ஒன்றுதான் ! கட உ வுள் உண்டென வாதிட்ட ஒரு தோழர் கூறினார்; "கடவுள் இல்லையென்போர் காட்டுமிராண்டிகள் " என்று!