________________
168 கருணாநிதி இந்தப் பட்டத்தை கடவுள் உண்டென்போர் மிகத் தாராளமாக சூட்டிவிடுவது நாடறிந்த உண்மை. அந்த உண்மையிலும் ஒரு உண்மை யிருக்கிறது. கடவுள் இல்லையென்போர் காட்டுமிராண்டிகள் என்றாள் காட்டுமிராண்டிகள் காலத்திலே கடவுள் இல்லை யென்பது உண்மையாகிறது. ஆகவே ஆண்டவன் அநாதி காலந்தொட்டு இருப்பவன் என்ற கூற்று பொய்யாக்கப் படுகிறது. அவர்கள் மொழியாலேயே! ஆதி மனிதன் கட டவுளை வணங்கவில்லை. வளர்ந்த மனிதன் தான் கடவுளைப் படைத்தானே தவிர கடவுள் மனிதனைப் படைக்கவில்லை யென்ற பேருண்மையும் வெளியாகிறது. வளர்ந்த மனிதன் ஆகாய விமானத்தைக் கண்டு பிடித்தான் - காட்டுமிராண்டி ஆக காய விமானம் கண்டு பிடிக்கவில்லை. அவன் மூடன் ! 66 வளர்ந்த மனிதன் புத்திமான் ! மூடன் ஆகாய விமானத்தைக் கண்டுபிடிக்கவில்லையென்பதற்காக ஆகாய விமானமே பொய் என்று கூறமுடியுமா? மூடன் கடவுளைக் கண்டுபிடிக்கவில்லை. அதனால் கடவுள் இல்லை யென சொல்லமுடியுமா? என்ற கேள்வியை ஆத்திகர் எழுப்பக்கூடும். அதற்கு ஒரே பதில்- ஆகாய விமானம் கண்டுபிடுக்கப்பட்ட தல்ல ! செய்யப்பட்டது! ஆகவே அது மனிதனுக்கு முன்பே இருக்க நியாயமில்லை. ராமாயண பாரத காலங்களிலே யிருந்ததாகச் சொல்லப்படும் வானவூர்திகள் கூட மனி தனுக்குப் பிறகு மனிதனால் செய்யப்பட்டவைதான். அதுபோலத்தான் கடவுளும் மனிதனால் செய்யப்